பக்கம்:தமிழ் உரை நடை.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வெட்டுக்கள் 133 வந்தார்களாம். சிதையும் நிலையில் உள்ள சில கல்வெட்டு களேச் செப்புத் தகடுகளில் படி எடுத்து வைத்தார்களாம். பழுதுற்ற கோயில்களைப் புதுப்பிக்கத் தொடங்குமுன் அவற்றிலுள்ள கல்வெட்டுக்களை ஒலேகளில் எழுதி வைத்துப் பின் பணி முடித்ததும் அப்படியே செதுக்கி வைப்பார்களாம். இவற்றைச் சில சாசனங்களே நமக்குக் காட்டுகின்றன. திருக்காலிவல்லக் கோயிற் சாசனம், 'ஸ்வஸ்தி ரீ, திருமண்டபமிழிச்சி யெடுப்பதற்கு முன்புள்ள சிலாலேகைப்படி” என்றே தொடங்குகிறது. அப்படியே திருவல்லக் கோயிலின் வானவன் மாதேவி யார் சாசனம் ஒன்றும் ரீவிமானம் இழித்துவதற்கு முன்புள்ள சிலாலேகைப்படி எனத் தொடங்குகிறது. எனவே, படி எடுத்து மறுபடியும் பொறிக்கும் வழக்கம் காட்டில் பழங்காலக்தொட்டு இருந்து வந்தது என்பதை அறியலாம். இவ்வாறு பாதுகாக்கப்பட்ட கல்வெட்டுக்களை வெளிக் கொணர்ந்து காட்டியவர் ஆங்கிலேயர் என்ருேம். அவரைப் பற்றித் தென்னிந்தியக் கோவிற் சாசன முன் அரை நன்கு விளக்குகிறது. ஸ்காத்துலாந்து தேசத்து லூலி என்னும் தீவில் கி. பி. 1753 ல் பிறந்து, 1782 ல் இந்தியாவிற்குப் பொறியாளராக (Engineer) வந்த அறிஞர் லெப்டின்னட் கர்னல் காலின் மக்கென்சி என்பவரே அவ்வறிஞராவார். அவர் வாழ்வின் பெரும்பாகம் தென் ட்ைடிலேதான் கழிந்தது. சென்னை சர்வேயர் ஜெனரல்' பதவி வகித்த அவர், குமரி முதல் கிருஷ்ணுவரையில் பலமுறை செல்லவேண்டியவரானர். அக்காலத்திலே தான் அவர் தேடித்தேடி சாசனங்களைப் பிரதி செய்து தம் பணியையும் குறைவின்றி நடத்தி வந்தார். இந்தப் பிரதி வேலை முதலியவற்றிற்குச் சம்பளத்தில் உடன் உதவிக்காகத் தனியாக வேறு சிலரையும் நியமித்திருந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/142&oldid=874410" இலிருந்து மீள்விக்கப்பட்டது