பக்கம்:தமிழ் உரை நடை.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 தமிழ் உரை நட்ை என்று இந்த அளவில் மெய்க்கீர்த்தி அமைகின்றது. இது பேரரசன் இராசராசசோழன் காலத்தில் வடவார்க் காட்டு மாவட்டத்தில் உள்ள உக்கல் என்னும் ஊரில் கண்ணன் ஆரூரன் என்பான் செய்த அறத்தைக் குறிப்பது. முதற்பகுதி இவ்வாறு அகவற்பாவென்னுமாறு அமைய, அடுத்துவரும் செய்திகளெல்லாம் பின்வருமாறு உரை நடையாகவே வருகின்றன: உய்க-ஆவது, ஜயங்கொண்ட சோழ மண்ட லத்துக் காளியூர்க் கோட்டத்துத் தனியூர் ஊசலாகிய பூர் விக்கிரமாபரணச் சதுர்வேதி மங்க லத்தின் மேலைப் பெருவழியில் பூரீ ராஜராஜ தேவர் திருநாமத்தால் கிணறுந் தொட்டியும் சமைப்பித் தான் உடையார் பூரீ ராஜராஜ தேவர் பணிமகன் சோழ மண்டலத்துத் தென்கரை நாட்டு நிந்தா விைேத வளநாட்டு ஆவூர்க் கூற்றத்து ஆவூருடை யான் கண்ணனரூரன். இவனே பூரீ ராஜராஜ கிணற்றில் தொட்டிக்கு நீர் இறைப்பார்க்கு அருண்மொழித்தேவன் மரக்காலால் நிசதம் நெல் ஐ உக ஆக, திங்கள் சு (6)க்குங்யிகம், பூரீ ராஜ ராஜன் தண்ணிர் அட்டுவார்க்கு நிசதம் நெல் ஐ உங் ஆக, திங்கள் சு (6)க்கு நயிகம், இப்பந்தலுக்குக் குசக்கலம் இடுவார்க்குத் திங்கள் க’ (1)க்கு நெல் சு (6) ஆக, திங்கள் சு (6)க்கு நெல் ந.சு (36)ம், ராஜ ராஜன் கிணற்றுக்கும் தொட்டிக்கும் சேதத்துக்கும் ஆண்டாண்டு தோறும் புதுக்குப் புறமாக வைச்ச நெல் உசய்உஐ ஆக சுய்சு கூஉ: இந்நெல்லுக்கு இவன் பக்கல் இவ்வூர் ஸ்பையோம் இறை திரவிய மும் கிரய திரவியமும் கொண்டு இறை இழிச்சி’ என்று எழுதப் பெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியைக் கல்வெட்டில் படி எடுக்க முடியவில்லே போலும் இந்தக் கல்வெட்டினல் அக்காலத்தில் வாழ்ந்த உரைகடை நிலையும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/145&oldid=874413" இலிருந்து மீள்விக்கப்பட்டது