பக்கம்:தமிழ் உரை நடை.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ᏙII தமிழும் வடமொழியும் தமிழ் மொழி தொன்மை வாய்ந்தது என்பது அனை வரும் அறிந்ததே. தொல்காப்பியர் காலத்தை இன்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னது என்று அறுதியிடுகின்ற மையின், அதற்கு முன்பே நல்ல இலக்கியங்கள் தமிழில் இருந்திருக்க வேண்டும். அதற்கு முன்னர் இந்தியா முழு வதும் இத்தமிழ் மொழி பரவியிருந்தது எனக் கொண் டாலும், தொல்காப்பியர் காலத்தில் வடகாட்டிலே தமிழ் மொழி வழக்கிழந்து, ஆரிய மொழி கால் கொண்டதென் பதை வரலாற்ருளர் நன்கு அறிவர். ஆகவே, இன்றுள்ள காட்டு மொழிகளுள் தமிழ் அல்லாத பிற மொழிகளுள்சிறப்பாக வடநாட்டு மொழிகளுள் - ஆரிய மொழி தொன்மை வாய்ந்ததாகும். அதாவது தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே அது வடகாட்டில் சிறக்க கிலே பெற்றதோடு தென்மொழியாகிய தமிழிலும் கலக்கும் வாய்ப்பினைப் பெற்றுவிட்டது. தொல்காப்பியத்திலேயே அந்த ஆரிய மொழி வடமொழியாய் கின்று எவ்வாறு இலக்கண எல்லேக்குட்பட்டுத் தமிழொடு கலந்தது என் பதைக் காண இயல்கிறது. அந்நாள் தொட்டு இந்நாள் வரை அவ்வடமொழி கலப்பு நீங்காமல் இருக்கின்றது. கால வேறுபாட்டு எல்லேக்கு உட்பட்டு அதன் கலப்பு மிகுந்தும் குறைந்தும் இன்றளவும் வாழ்கின்றது. எனவே, தொல்காப்பியர் காலந்தொட்டு வரும் தமிழ் உரை நடை வள்த்தைக் கர்னும் நமக்கு அதன் கலப்பைப் பற்றியும், அதல்ை உண்டான கலக்கேடுகளைப் பற்றியும் அறிய வேண்டிய தேவை உண்டாயிற்று. கடந்த மூவாயிர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/152&oldid=874421" இலிருந்து மீள்விக்கப்பட்டது