பக்கம்:தமிழ் உரை நடை.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 தமிழ் உரை நடை யிரமாண்டுகளாகப் பாட்டிலும் உரை நடையிலும் அவ் வடமொழிக் கலப்புச் செய்த மாற்றத்தையும் பிறவற்றை யும் காணலாம். தமிழில் வழங்கும் சொற்களைப் பிரிக்கும் காலத்தில் இயற்சொல், திரிசொல், திசைசொல், வடசொல் என நான்கு வகையாகப் பிரித்தனர். அவற்றுள் வடசொல் என்பது ஆரியமொழியிலிருந்து தமிழில் வந்து வழங்கிய சொல்லாகும். ஆரியத்தை வடமொழி என்று கூறுவது மரபு அது வடக்கிருந்து வந்ததாகலானும், தமிழில் பிற மொழி' களேக் காட்டிலும் அது காலத்தாலும் அளவாலும் பெரிதும் பயின்றுவந்த காரணத்தாலும், அதைத் தனியாகப் பிரித்தார் கள் எனக் கொள்ளலாம். அவ்வாறு வழங்கும் ஆரியமொழி யையே தமிழர் வடமொழியாகக் கொண்டு தம்மொழியோடு கலக்கத் தொடங்கினர். அவ்வாறு தொடங்கிய காலம் எது என்பதைத் திட்டமாகக்கூற இயலாதேனும், அக் காலம் தொல்காப்பியர் காலத்துக்கு முற்பட்டது என்று கொள்வது பொருத்தமானதாகும். அம்மொழியைத் தமிழில் எடுத்தாளப் பெறுவது தடுக்கப் பெருவிடினும் அவ் வெழுத்துக்களே அப்படியே எடுத்தாளலாகாது என்ற வரை யறை மட்டும் திட்டமாகத் தொல்காப்பியத்தில் செய்யப் பெற்றுள்ளது. ஆரியச் சொற்கள் தமிழில் கலக்கும் போது அவை வடசொற்களாகின்றன. எனினும் அவற்றுள் வட மொழி எழுத்துக்கள் இருத்தல் கூடாது என்பதை, வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே. - (தொல், எழுத்து. எச்ச. 5) T65 தொல்காப்பியர் நன்கு எடுத்துக் காட்டுகின்ருர். இதற்கு உரை எழுத வந்த சேவைரையர் வடசொற்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/153&oldid=874422" இலிருந்து மீள்விக்கப்பட்டது