பக்கம்:தமிழ் உரை நடை.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 தமிழ் உரை நடை தைக் காண்போம். சங்க காலத்தில் உரைநடையைப் பற்றி அதிகம் நாம் அறிய முடியவில்லையாயினும், செய்யுள் கடையில் வந்த பல பாடல்கள் நம்முன் கிற்கின்றன. இன்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல் காப்பியர் வாழ்வுக் கதையே அவரை வடமொழியொடு பிணைத்துப் பேசுகிறது. அக்கதை உண்மை அன்று என்ருலும், நாம் மேலே கண்ட அவர் காட்டிய எழுத்துக்கள், அக்காலத்தில் வடமொழி தமிழில் வழங்கி வந்தது என்பதைக் காட்டத் தவறவில்லை. எனினும், தொல்காப்பியத்தை இந்திரன் இயற்றிய ஐந்திர வியாகரணத் தொடு ம், பாணினியத்தொடும் தொடர்பு படுத்தி ஆராய்ச்சி செய்வது மிகவும் பொருந்தாது.' 'ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் என வரும் தொல்காப்பியப் பாயிரத்தின் தொடரைக் கொண்டு, வட மொழி இலக்கணமாகிய ஐந்திரத்தில் வல்லவர் தொல் காப்பியர் எனக்கொள்வது ஓரளவில் பொருத்தமானலும், சம்பந்தப்படாத பாணினியத்தைப் பற்றி ஈர்த்து அதன் ஆசிரியராகிய பாணினி முனிவரை இவரொடு தொடர்பு படுத்துவது பொருந்தாது. தொடர்பு படுத்துவதற். காகவே பொருந்தாத இரண்டொரு மேற்கோள்களைக் காட்டுதலும் பொருத்தமானதாகாது. ஆங்கி லத் தி ல் Noun, verb பெயர், வினை என்ற சொற்களின் அடிப் படையிலேயே மொழியியங்குவதால் அம்மொழி தமிழ்ப் பெயர் வினை அடியாகப் பிறந்தது எனக் கூறுதல் எப்படிப் பொருந்தாதோ, அப்படியே பாணினி, தொல்காப்பியர் இருவரும் காட்டும் பெயர் வினைச் சொற்களேக் காட்டிப் பாணினியத்திலிருந்து தொல்காப்பியம் பிறந்தது என 1. இலக்கியச் சிந்தனைகள்-S. வையாபுரிப் பிள்ளை. (பக், 27, 34, 55, 57)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/155&oldid=874424" இலிருந்து மீள்விக்கப்பட்டது