பக்கம்:தமிழ் உரை நடை.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழும் வடமொழியும் - 147 லும் பொருந்தாது. அது போன்றே எழுத்து ஒலி உண்டாகும் முறையைக் காட்டுவதும் பொருந்தாது." இவை எல்லா மொழிகளுக்கும் பெரும்பாலும் பொது வான கருத்துக்கள். ஒலி பிறக்கும் முறை ஒன்ருகத் தானே இருக்க முடியும்? ஆகவே, இவை போன்ற சில பொருந்தாத கருத்துக்கள் வழி வடமொழிப் பாணினியத் தைப் பின்பற்றியவர் தொல்காப்பியர் எனக் காட்டி அவரைக் கி. மு. 150 க்குக் கொண்டுவர நினைத்தல் சிறிதும் பொருந்தாது. அவர் ஆய்வின்படி எல்லா மொழிகளின் பிறப்புக்களையுமே ஒன்ருகப் பிணக்க முடியும். இதனல், தொல்காப்பியத்தைக் கண்டே ஆங்கிலமும் இந்தியும் எழுதப்பட்டன என்னலாம். மேலும், அவர் வாதப்படி தொல்காப்பியத்தைக் கண்டுதான் பாணினி இலக்கணம் எழுதினர் எனக் கொள்ளல் தவறு இல்லே. இரண்டிலும் ஒத்த கருத்து வருவதால் ஒன்றை ஒன்று பார்த்து எழுதியது எனல் பொருந்துமா? அதுவும், உலகில் அனைவரும் ஒப்ப ஏற்ற கருத்துக்களே ஒவ்வொரு மொழி யாளரும் ஒரே வகையிலேதானே கூறுவார்கள்? இரண்டும் இரண்டும் நான்கு என்பது எம்மொழிக்கும் பொருந்தியது தான். அதனல், தமிழிலிருந்து இக் கணக்கை மற்றவர் கற்ருர்கள் என்பது எவ்வளவு தாழ்வு இலக்கணமும் கணக்குப் போன்றதே. அனைத்து மொழிக்கும் சொல், பிறப்பு முதலியவற்றில் பல பொது விதிகள் இருக்கும். சில மொழிகளில் பல ஒற்றுமை அமைப்புக்கள் உள்ளன. அவற்ருல் ஒன்றிலிருந்து மற்ருென்று பிறந்தது என்பது பொருந்தாத வாதமாகும். இனி, தொல்காப்பியப் பாயிரத்திலோ நூலிலோ வாராத-பேசப்படாத-கினேக்க முடியாத பாணினிபற்றி 1. தமிழ்ச்சுடர்மணிகள்-வையாபுரிப் பிள்ளை, பக். 30 2. டிெ பக். 31

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/156&oldid=874425" இலிருந்து மீள்விக்கப்பட்டது