பக்கம்:தமிழ் உரை நடை.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 தமிழ் உரைநடை நாம் கவலைப்பட வேண்டா. பாயிரத்தில் வரும் ஐந்திரம்" என்ற சொல் இந்திரன் எழுதிய ஐந்திர வியாகரணமாகிய வடமொழி இலக்கணம் என்றுதான் ஏன் கொள்ள வேண்டும்? தொல்காப்பியர் காலத்தில் வடசொற்கள் வழங்கினமையாலேயே அவர் வடமொழி இலக்கணத்தைக் கற்ருர் எனல் பொருந்தும். இன்று இந்தி அறியாத தென்னுட்டவர் அவர் தம் மொழிகளில் இந்தியை வழங்க -இந்திச் சொற்களே எடுத்தாள-தத்தம் எழுத்துக்களே உபயோகிக்கின்றனர். அதற்கென ஒரு வரை ய ைறு அமைக்கின்றனர் என எண்ணுவோம். அவர்கள் இந்தி வியாகரணம் கற்றவராகத்தான் இருக்க வேண்டும் என்ற நிலை உண்டோ? அது போன்றதே ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் என்பது. ஐந்திரம் என்பது ஐந்திறமாக நின்று தமிழில் உள்ள எழுத்துச் சொல் பொருள் யாப்பு அணி என்ற ஐம்பொருள்களைக் குறிக் கின்றன எனக்கொள்ளலாமே? எழுதும் காலத்து ஒலையில் ரகர றகரங்கள் வேறுபடுதலும், வேறு சிலவும் மறைக்கப் படுதலும் காண்கிருேம். எனவே, தமிழ் நாட்டிலே வாழ்ந்து தமிழ் இலக்கியங்களைக் கற்ற தொல்காப்பியர், தமிழ் மொழியில் உள்ள ஐந்து வகை இலக்கண அமைப்புக்களையும் நன்கு ஆய்ந்தவர் எனக்கொள்ளுவது மிகப் பொருத்தமாகும். யாப்பும் அணியும் இல்லே யென்பார்க்குச் செய்யுள் இயல் உவம இயலைக்காட்டி ஐங் திறம் நிறைந்த நூல் இது எனக் கூறுதல் பொருந்துமே! ஐந்திறம் அறிந்த என்ருே, பயின்ற என்ருே, வல்ல' என்ருே கூருது. ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்' எனக் கொள்ளுதல் மிகவும் பொருத்தமானதேயாகும். எனவே, தொல்காப்பியர் காலத்திலே வடமொழி தமிழிலே வந்து வழங்கியிருந்து, அவ்வழக்குக்கு ஏற்ற இலக்கணமும் இருந்த போதிலும், தொல்காப்பியர் வடமொழி இலக்கண

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/157&oldid=874426" இலிருந்து மீள்விக்கப்பட்டது