பக்கம்:தமிழ் உரை நடை.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழும் வடமொழியும் 149. நூலே அறிந்து, இலக்கணமற்ற தமிழ் மொழிக்கு வடமொழி இலக்கணம் பற்றித் தம் நூலே இயற்றினர் என்று கூறு வதும், அதனல் அவர் காலத்தால் பிற்பட்டவர் எனக் காட்டுவதும் சிறிதும் பொருந்துவனவாகா.* இனித் தொல்காப்பியனர் காலத்தில் வடகாட்டு வழக்கங்கள் இங்கு வந்து கலந்துவிட்டதைக் காண் கின்ருேம். அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற வகுப்பும், அவரவர்களுக்கு உரிய செயல்களும், அதில் பேசப் பெறுகின்றன. இப்பகுப்பு முறை ஆரியர்களுக்குள் இருந்த வேறுபாட்டு முறையே என்பது அவரவர்களுக்கு வரையறுத்துள்ள தொழில் முறைப்பாடுகளால் நன்கு விளங்கும். சிலர் இவற்றைத் தமிழ்ப் பாகுபாடு என்றும், தொல்காப்பியர் காலத்துக்கு முன் ஆரியர் தம் வகுப்பு முறை தமிழகத்தில் இடம் பெறவில்லை என்றும் கூறுவர். அவர் கூற்று ஆராய்தற் குரியதாகும். மேலும், பாயிரத்தில் வரும் 'நான்மறை முற்றிய அதங்கோட் டாசான்' என்பதற்கு உரை எழுத வந்த நச்சினர்க்கினியர் நான்மறையென்பது வடமொழி வேதங்களைக் குறி யாது எனவும், அவை சின்ள்ை பல்பிணிச் சிற்றறிவி ைேர்க்குப் பின்னல் வேதவியாசரால் சொல்லப்பட்டன, எனவும் கூறுவதை ஒட்டி, வேதமும் அதன் பழக்கவழக் கங்களும் தமிழ் நாட்டில் தொல்காப்பியர் காலத்திற்குப் பின்னரே புக ஆரம்பித்தன எனக் கொள்ளலும் உண்டு. எப்படியாயினும், தொல்காப்பியர் காலத்தில் ஆரியர்தம் கலப்புத் தமிழ் காட்டில் உண்டாகி விட்டதென்பதும், அது பேரளவினதாக இல்லாது அருகியே இருந்ததென் பதும், அவர்தம் ஆரிய மொழிகளிலுள்ள சொற்களைத் தமிழில் பெயர்த்து எழுதும் வழக்கம் உண்டு என்பதும், ஐந்திரம் என்ற நூல் இருந்ததே ஐயத்துக் குரியது என ஆராய்ச்சி கூறுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/158&oldid=874427" இலிருந்து மீள்விக்கப்பட்டது