பக்கம்:தமிழ் உரை நடை.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழும் வடமொழியும் 151 வந்தன என்பது பொருந்தும். அவ்வாறு வழங்கிய சொற்களும் மிகச் சிலவே என்பதையும் காணலாம். சங்க காலத்தில் வடமொழிச் சொற்கள் அதிகம் இல்லையேனும், அதை ஒட்டிய வள்ளுவரது குறள் எழுந்த காலத்திலும், காப்பிய காலத்திலும் வடமொழிச் சொற் களும் வடநாட்டுப் பழக்க வழக்கங்களும் அதிகமாகக் கலந்துள்ளமையைக் காண்கிருேம். ஏறக்குறையச் சங்க காலத்தை ஒட்டித்தான் வடநாட்டுப் பெருஞ்சமயங்களா கிய பெளத்தமும் சமணமும் தமிழ் நாட்டில் குடி புகுந்தன என்னலாம். வடநாட்டில் இருந்த ஆரிய சமயமாகிய வைதிக சமயம் அவற்றுக்கு முன்பே தமிழ் நாட்டில் புகுந்து வாழத் தொடங்கிலுைம், அதனல் மக்களைத் தன் வழிப் படுத்திக்கொள்ள முடியவில்லை. இவை இரண்டும் தமிழ் நாட்டில் பெருஞ்சமயங்களாய் நின்று அரசர்களேத் தம் வசம் ஈர்த்துச் சில நூற்ருண்டுகள் தமிழ் நாட்டில் ஆண செலுத்தின. அத்தகைய சிறந்த நிலையில் வாழ்ந்த பெளத்தமும் சமணமும் தத்தம் கொள்கைகளே வடமொழியிலிருந்து தமிழுக்குக் கொண்டு வந்தன. அதல்ை அந்தக் காலத்தில் பல வடமொழிச் சொற்கள் தமிழில் இடம் பெறலாயின. பழக்க வழக்கங்களும் அப்படியே. எனவேதான் கடைச்சங்க இலக்கியங்களில் காணுத பல வட வடமொழிச் சொற்களும், வழக்கங்களும் திருக்குறளிலேயும், சிலப்பதிகாரம் மணிமேகலை போன்ற காப்பியங்களிலேயும் காண்கின்றன. திருவள்ளுவர் சமண சமயத்தவர் என்பது சிலர் கொள்கை; இளங்கோவடிகள் சமணர், மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச் சாத்தனர் பெளத்தர். எனவே, அவர் தம் மதக் கருத்துக்கள் தமிழ் நாட்டில் பரவத் தொடங்கிய காலத்தில் அவரவர் தத்தம் கருத்துக்கேற்ற சொற்களே மூலநூல்களிலிருந்து கொண் டிருப்பர். எனினும், அறிஞர் வையாபுரிப் பிள்ளை அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/160&oldid=874430" இலிருந்து மீள்விக்கப்பட்டது