பக்கம்:தமிழ் உரை நடை.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழும் வடமொழியும் 153 சிதைவுகளோ என்னுமாறு வளர்ந்துவிட்டன; பண்டைய திராவிடச் சொற்களும், அவற்றின் வேர்ச்சொற்களும், அமைப்பு முறையும் நீங்க, பிற மொழிகளெல்லாம் வட மொழி வகையைப் பின்பற்றி வளர்ந்து இன்று தம் இன மொழியாகிய தமிழிலிருந்து வேறுபட்டனவாகி, அவை. தனித்தனி வாழ்கின்றன. பின் தோன்றிய மலையாள மொழியும் அப்படியே மாறிவிட்டது. தமிழ் மட்டும் பழங்காலக்தொட்டே ஆரிய மொழிச்சொற்களே எடுத் தாண்டபோதிலும்,அதற்கெனவரையறை செய்து கொண்டு, தன்னிலையினின்று மாருத வகையில் இன்று வரை வாழ் கிறது. அதேைலதான் இன்றும் இந்திய நாட்டுப் பெரும் பரப்பில் பிறவெல்லாம் இந்திபற்றி எதிர்ப்புக் காட்டா திருக்க, இத்தமிழ் காட்டில் மட்டும் எதிர்ப்பு உணர்ச்சி இருக்கக் காண்கிருேம். நாட்டில் மொழி வளர்ந்த வர லாற்றைக்காணும் நல்லறிஞர்கள் இவ்வுண்மையை உணர் வார்கள் அல்லரோ? இனிக் காப்பிய காலத்தை அடுத்துத் தமிழ் நாட்டு வரலாற்றில் ஓர் இருண்ட காலமே உருவாயிற்று. அக் காலத்தில் பிற சமயங்கள் மட்டுமன்றி, பிற அரசுகள், கொள்கைகள் அனைத்தும் புகுந்தன. அதனல், தமிழ் வாழ்வே சிதைந்தது என்னலாம். பிற ஏழாம் நூற்ருண் டில், பல்லவர் காலத்தில் தெளிந்த தமிழ் நாட்டைக் காணும் போது எத்தனையோ மாறுபாடுகளை நாம் காண் கின்ருேம். மொழி வகையில் நோக்கும்போது வடமொழி தமிழில் அதிகமாகக் கலந்துள்ளது. மேலும், இரண்டை யும் வேறுபடுத்தி கோக்கும் கிலேயில் நாடு இல்லே என்பதை, - . ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் ' ஆரியமும் தீந்தமிழும் ஆயி ன்ைகாண் என்னும் அடிகளால் ஏழாம் நூற்ருண்டின் இடைக்காலத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/162&oldid=874432" இலிருந்து மீள்விக்கப்பட்டது