பக்கம்:தமிழ் உரை நடை.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 தமிழ் உரைநடை தில் வாழ்ந்த திருநாவுக்கரசர் பாடிய தேவாரத்திற் காண் கின்ருேம். இந்த நூற்ருண்டு தொடங்கிப் பிற்காலச் சோழர் பாண்டியர் காலம் வரையில் ஆரியமும் அதன் வழி ஆரிய மக்களும் தமிழ் அரசர்களோடு தொடர்பு கொண்டவர்களாய்த் தங்கள் கொள்கைகளையும் மொழி யையும் வளர்க்கப் பெரும்பாடு பட்டிருக்கிருர்கள் என் பதை வரலாறு காட்டுகிறது. அக்காலத்தில் எழுந்த உரை நடை நூல்களும், செய்யுள் நூல்களும் வடமொழிச் சொற்களே அதிகமாக எடுத்தாள்வதைக் காண்கிருேம். அக்கால இலக்கியங்களே வைதிக சமயமாகிய ஆரிய சமயத்தையும் அதனேடு பின்னல் தொடர்பு படுத்தப் பட்ட சைவ வைணவ சமயங்களையும் பற்றிய இலக்கியங் களாக அமைந்துவிட்டன. பாடும் முறையுங்கூடச் சங்க காலத்திலிருந்து மாறுபட்டுவிட்டது. இப்படி இடைக் காலத்தில் தமிழ் நாட்டில் வடமொழி ஆட்சி செலுத் தியது என்னலாம். இக்காலத்தில் வடமொழிச் சொற்கள் தமிழில் மிக அதிகமாகக் கலந்தன. சில இலக்கியங்கள் வடமொழிகளிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டன. பல சமணத் துறவியர் மொழிபெயர்ப்பு இலக்கியங்களைச் செய் தனர். அதன் எல்லை விரிவடைந்து கிலே கெடும் என்று கண்டுதானே-அன்றி ஏனே-நன்னூலார் அக்காலத்தில் ஒரு இலக்கண நூலே எழுதி, அதில் வடமொழியை ஆளுவ தற்கு வரம்பையும் குறித்துச் சென்ருர். ஈண்டு உரை கடை வகையில் வடமொழி கொண்ட தொடர்பைக் காண்போம். கி. பி. எட்டாம் நூற்ருண்டின் இலக்கியம் எனப் படும் இறையனர் களவியல் உரை நூலில் பல வடமொழிச் சொற்கள் இடம் பெற்றுள்ளன. அந்த வடமொழிக் கலப்பைக் கொண்டேதான் அதன் ஆசிரியர் நக்கீரர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/163&oldid=874433" இலிருந்து மீள்விக்கப்பட்டது