பக்கம்:தமிழ் உரை நடை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 தமிழ் உரைநடை என்ற பாட்டிலே எவ்வளவு வேகமாகப் பாட்டையும் உரையையும் பயிலாத செவிகளை ஒட்டைச் செவி என் கின்ருர் இப்பாட்டு காலத்தால் பிந்திய தாகலாம். கருத்து ஏற்றுக்கொள்ளத் தக்கதுதானே? எனவே, பழங்காலத் திலே பாட்டும் உரையும் பயின்றே வழக்கத்தில் இருந்தன என அறிகின்ருேம். - சோழன் கலங்கிள்ளி சங்க காலத்திலே வாழ்ந்த சிறந்த மன்னன். அவனே முதுகண்ணன் சாத்தனர் என்ற புலவர் பாராட்டிப் புகழ்கின்ருர், 'வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி, அருள வல்லே யாகு மதி, என அவனுக்கு வாழ் வாங்கு வாழ வேண்டிய அற நெறியை வற்புறுத்தி உரைக்கின்ருர். அதில் அவர் மன்னர் கில்லா உலகத்து நிலைமை தூக்கி மற்றவருக்கு உதவவேண்டிய நெறி இவை இவை என எடுத்துக் காட்டுகின்ருர், கில்லா உல கில் நிலைபெற வேண்டுமானல், அவர்கள் புலவர் பாடும் புகழைப் பெற்றவர்களாக வாழ வேண்டுமென்றும், புல வர் புகழ் இன்றேல், என்றென்றும் அவர்தம் பெயர் உல கில் நின்று நிலவாது என்றும் எடுத்துக் காட்டுகின் ருர், புலவர் பாடும் புகழுடையவரே இம்மையில் இசை பட வாழ்ந்து மறுமை இன்பத்தையும் மறுவிலா வகை யில் எய்துவர் என்பதையும் எடுத்துக் காட்டுகின்ருர். அப்படிக் காட்டும்போது புலவர் பாடும் புகழை அவர் அலசிக் காண்கின்ருர். சேற்றிலே செந்தாமரை பிறக் கின்றது. அதில் ஆயிரக்கணக்கான இலைகள் தோன்றிக் கேட்பாரின்றி மறைகின்றன. ஆயினும், ஒரு சில பூக்கள் தம் அழகாலும் தோற்றத்தாலும் மக்களே தம் வழி ஈர்க்கின்றன. ஆம்! அம்மலர்கள் நிலையிலே புலவரால் பாடப்படும் புகழுடையோர் வாழ்வார்கள் என்கின்ருர். அப்புலவர்கள் எப்படிப் பாடுவார்கள்? இப்பாடலைப் பாடிய புலவர் முது கண்ணன் சாத்தனர் சிறந்த கவிஞர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/17&oldid=874440" இலிருந்து மீள்விக்கப்பட்டது