பக்கம்:தமிழ் உரை நடை.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழும் வடமொழியும் 161 எனக் கடவதிறே? கயலுகளா நிற்கச் செய்தேயிறே. பிள்ளை வாய்க் கடங்குவது தேடுகிறது ' இது வடமொழி பெற்றிருந்த ஆதிக்கத்தை நன்கு எடுத்துக் காட்டுகின்றது. இது போன்றே பிற இலக்கி யங்களிலும் இவ்வகை மேற்கோள்களைக் காணலாம், பிற்காலத்தில் வந்தவராகிய குமர குருபர அடிகளார் தம்மை வடமொழி வல்லுநர் என மற்றவர் நினைக்கும் வகையில், பால லோசன பானுவி லோசன பரம லோசன பக்த சகாயமா கலா காலதிரி சூலக பாலஏ கம்ப சாம்ப கடம்பவ னேசனே' என்னும் அடிகளே எழுதியுள்ளார். இப்படியே நேற்று வரையில் வடமொழிச் சொற்களே அதிகமாகப் பயன் படுத்தும் வகையில் மொழி வளர்ந்தது. இந்த நிலையில் இலக்கண அமைப்பிலேயும் சில மாறுபாடுகளைக் கொண்டு வந்து புகுத்த நினைத்தார்கள் மிகவும் பிற்காலத்தில் வந்த சாமிநாத தேசிகர் போன்ற பெரியவர்கள். - 'ஐந்தெழுத்தாலொரு பாடை அமைந்தது. என்று தமிழைக் கூறி, அதைப் பழித்துரைத்தனர். அது வட மொழியிலிருந்து வந்த மொழிதான் என நிறுவ நினைக்கும் அளவுக்கு அந்தப் பிற்காலப் புலவர் கருத்துக்கள் சென்று விட்டன. ஆயினும், அத்தகைய இலக்கிய இலக்கணப் புலவர் தம் கொள்கைகளும் நூல்களும் கால வெள்ளத்தை எதிர்த்து கிற்க மாட்டாதனவாக அழிந்து விட்டன என்ன. லாம். இன்று தமிழ் நாட்டில் மட்டுமன்றி, தமிழ் அறிந்த பிற பகுதிகளிலுங்கூடத் தொல்காப்பியமும் நன்னூலும் தெரியும் அளவுக்கு-என்-ஒரு சிறு அளவுக்குக்கூட 11 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/170&oldid=874441" இலிருந்து மீள்விக்கப்பட்டது