பக்கம்:தமிழ் உரை நடை.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்கால உரையாசிரியர்கள் 165 நிலயைக் கண்டு, பின் அப் பிற சமயத்தவர்களான மேலே நாட்டு அறிஞர்கள் செய்த தொண்டினையும் சிறிது நோக்கு வோம் : இந்தக் காலத்தின் இலக்கிய வளர்ச்சி நிரம்ப அழகிய தேசிகர் வழித் தொடங்குகிறது எனக் குறிக்கின்ருர் திரு. வ. சு. செங்கல்வராயப் பிள்ளை அவர்கள். இவர் ஒரு பெரும் புலவர். இனிய பாடல்களைப் பாடியுள்ளார். அவற்றுடன் உரையசிரியராயும் இருந்திருக்கிருர் எனக் கொள்ளல் பொருந்தும். இக்காலத்தில் வாழ்ந்த சிறந்த இலக்கணப் புலவர்கள் வைத்தியநாத தேசிகரும் சாமிநாத தேசிகரும் ஆவார்கள். அவர்கள் எழுதிய இலக்கண விளக்கம், இலக்கணக் கொத்து என்னும் இரண்டும் இன்று தமிழ் காட்டில் வழக்கிழந்து விட்டன. காரணம் என்ன? இவ்விரு வரும் தம் காலத்தில் தமிழ் நாட்டில் வடமொழிக்கு இருந்த செல்வாக்கினே எண்ணி, தமிழின் அடிப்படை இலக்கண அமைதிகளையும் முறைகளேயும் மறந்து, தம் விருப்பப்படி இலக்கணத்தை எழுதத் துணிந்து விட்டனர். இந்த இருவரோடு இணைந்தவராகச் சொல்லக் கூடிய புலவர் சுப்பிரமணிய தேசிகராவர். அவர் எழுதிய நூல் 'பிரயோக விவேகம் என்பதாகும். இம்மூவருள் சாமிநாத தேசிகர் தம் நாட்டையும் மொழியையும் மறந்து, தமிழ் இலக்கணத்தையே மாற்றும் வகையில் தம் நூலே எழுதி யுள்ளார் என்பதைத் திரு. செங்கல்வராயப் பிள்ளே அவர்கள் நன்கு எடுத்துக் காட்டியுள்ளார்கள்." 1. History of Tamil Proses P. 34 2. “Although he was a great Tamil Scholar, he seems to have had very crooked notions, in some cases about his own Tamil Language and literature, (History of Tamil Prose, p 36)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/174&oldid=874445" இலிருந்து மீள்விக்கப்பட்டது