பக்கம்:தமிழ் உரை நடை.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 தமிழ் உரை கடை தொகுத்துக் கூறுந் தமிழ் நடையான் அகப்பொரு ளும் புறப்பொருளுமென இரண்டு வகைத்தாய்க் குணமும் அலங்காரமுவெனக் கூறுபட வந்த அணி யான் உளதாகிய சிறப்பினைப் பொருந்திச் செய்யுளிடத்தே சார்ந்து விளங்கும் இயல்பினை யுடைத்தாம்.' இவ்வாறு இவர்களது உரை நடை செல்ல, இவர்கள் காலத்தவராகவும், சாமிநாத தேசிகர் தம் மாணவராகவும் கொள்ளப் பெறும் சங்கர நமச்சிவாயப் புலவர் தமிழ் உரை நடைக்குச் சிறந்த தொண்டு செய்தார் என்னலாம். இவர் பல உரை நடை நூல்கள் எழுதவில்லை என்ருலும், இவர் செய்த ஒரே தொண்டு சிறந்த தொண்டாகும். பழங்கால உரையாசிரியர்கள் தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்களுக்கும் இலக்கியங்களுக்கும் உரை எழுதினமை போன்று, இவர் பிற்காலத்தில் பவணந்தியாரால் செய்யப் பெற்ற மரபு கெடாத இலக்கண நூலாகிய நன்னூலுக்கு நல்ல உரை எழுதிச் சென்றுள்ளார். இவர்தம் உரையே நன்னூலுக்குச் சிறந்த உரையாகப் போற்றப் பெறு கின்றது. இவரது உரையை வைத்தே சிவஞான முனிவர் சில இடங்களில் சேர்ப்பன சேர்த்து உரையை மேலும் சிறக்கச் செய்துள்ளார். நன்னூலுக்கு நல்ல விருத்தி உரை காரர் சங்கர நமச்சிவாயரேயாவர்; காண்டிகை, விருத்தி என்ற இருவகை உரைகள் உள என்று கூறிய நன்னூலின் இலக்கணத்துக்கு எடுத்துக்காட்டாக அந்நூலுக்கு யாரும் எழுதாது வைத்த குறையைத் தம் விருத்தி உரையால் நீக்கி வைத்தவர். எனவே, இவரது உதவி உரை நடை வளர்ச் சிக்கு மட்டுமன்றி இலக்கண வளர்ச்சிக்கும் பெருந்துணை 1. இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 2-ஆம் சூத்திரம் உரை, பக். 2. -வைத்தியநாத தேசிகர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/177&oldid=874448" இலிருந்து மீள்விக்கப்பட்டது