பக்கம்:தமிழ் உரை நடை.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்கால உரையாசிரியர்கள் 169: புரிந்தது என்னலாம். இன்றளவும் இவரது உரையே சிறந்த உரையாக நன்னூலுக்கு அணிசெய்கிறது என்பதை யாரே மறுக்கவல்லார்? பழங்கால உரையாசிரியர்களோடு ஒத்து எண்ணத் தக்கவர் இவர் என்று கூறி மேலே செல்லலாம். பதினெட்டாம் நூற்ருண்டில் சிறந்த உரையாசிரியராய் விளங்கியவர் சிவஞான முனிவரே என்ருல் மறுப்பவர் யாரும் இலர். நெல்லே மாவட்டத் தென்கோடியில் தோன் அறிச் சிறக்கத் தமிழ் கற்று, செய்யுள் இயற்றுவதிலும், உரை கடை ஆக்குவதிலும், தருக்க வாதம் செய்வதிலும், சமய நெறி காட்டுவதிலும் சிறந்து விளங்கிய ஒப்பற்ற ஞாயிருய் இவர் விளங்கினர் என்பதை நாடு நன்கு அறிந்துள்ளது.' இவர் பாடல்களின் செழுமையைக் காஞ்சிப்புராணம், சோமேசர் முதுமொழி வெண்பா, அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ் போன்றவற்ருல் நன்கு உணரலாம். சிவஞான முனி வர் இனிய பாடல்களே யாத்ததோடு அமையாது, பல நூல் களுக்கும் உரை எழுதியுள்ளார். மேலே கண்ட சங்கர நமச்சிவாயர் தம் நன்னூல் விருத்தி உரையை உடன் கொண்டு மேலாக இவர் தமது ஆராய்ச்சித் திறம் கொண்டு பல வினவிடைகள் மூலம் சில சூத்திரங்களுக்குப் பொருந்தும் 1. The famous Authinam of Thiruvavaduthurai had produced very many great sages, poets and writers in its days but it produced none equal to Sivagnanayogi. The Tamil writers do not think that any praise is too lavish when bestowed upon him. He was a great poet and rhetorician, a keen logician and philosopher and commentator and a great Sanskrit scholar. (History of Tamil Prose, p. 39)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/178&oldid=874449" இலிருந்து மீள்விக்கப்பட்டது