பக்கம்:தமிழ் உரை நடை.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 தமிழ் உரை நடை உரைகளையேற்றுப் பொருந்தா உரைகளுக்கு மறுப்புக் கூறும் திறம் நோக்கத் தக்கதொன்ருகும். இவர்தம் நன்னூ லின் இலக்கண விளக்கங்கள் சங்கர நமச்சிவாயரது சுடர் விளக்கினே கன்ருகத் தூண்டி விட்டு ஒளி காலச் செய் கின்றன. இரண்டொன்று காண்போம். "மக்கள் தேவர் நரகர் உயர்தினை மற்றுயிர் உள்ளவும் இல்லவும் அஃறிணை.' என்ற கன்னூல் (261) குத்திரத்திற்கு விருத்தி உரையாக, "மக்கள் தேவர் நரகர் எனப்படுதல் அவ்வவ் யாக்கையும் உயிரும் கூடி நின்ற வழி ஆதலின், அவை பிரிந்த வழியும் வேறு கருதிய வழியும் அவரு யிரையும் உடம்பையும் உயிரில்லாதனவாகிய அஃறிணையாகக் கொள்ளப்படுமென்க. விலங்கு முதலியவற்றின் உயரினங்களு மன்ன." எனச் சங்கர நமச்சிவாயர் நன்கு விளக்குகின்ருர், அவ் விளக்கைத் துாண்டும் முகத்தான் சிவஞான முனிவர், "மக்களாகப் பிறந்து புண்ணிய பாவமியற்றிப் புண்ணிய மிகுதியால் தேவராயும் பாவ மிகுதியால் நரகராயும் பிறத்தலின், மக்கள் தேவர் நரகரெனச் சாதன சாத்திய முறையே வைத்தாரென்க. அன்றி யும், ஆசிரியர் தொல்காப்பியர், 'உயர்திணை என்மனர் மக்கட் சுட்டே,' என முன்னர்க் கூறிப் பின்னர் "இவ்வென வறியு மந்தந் தமக்கில வாகிய தெய்வஞ் சுட்டிய பெயர் முதலியனவும் 'உயர் திணை மருங்கிற்பால் பிரிந் திசைக்கும்' எனக் கூறலின், உயர்திணைப் பாற்படுத்து. மக்கள் தேவர் நரகர் உயர்திணை' என முறை தெரிந்து ஒதின ரெனக் கோடலுமா மென்க." என்று தமது சமய, தருக்க, இலக்கிய இலக்கணப் புலமை கலமெல்லாம் தோன்ற எழுதியிருப்பது அறிந்து அறிந்து மகிழத்தக்கதன்ருே இதே போன்று சூத்திரத்துக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/179&oldid=874450" இலிருந்து மீள்விக்கப்பட்டது