பக்கம்:தமிழ் உரை நடை.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்கால உரையாசிரியர்கள் 179 றென்றும் கடமைப்பட்டுள்ளது. இவர் இவ்வாறு உரை கடை மட்டுமின்றிப் பல பாடல்களையும் எழுதியுள்ளார் எனவும் அறிகிருேம். இன்று காட்டில் உலவும் பலப் பல சங்கப்பாடல்களே ஏட்டிலிருந்து எடுத்து ஆராய்ந்த சிறந்த புலவர் இவரே என அறிஞர் காட்டியுள்ளனர்.' தொல்காப்பியம், திவாகரம், கல்லாடம், திருக்குறள் பரிமேலழகர் உரை போன்ற நூல்களை எடுத்துத் தொகுத்துத் தமிழ் வளர உதவி நின்ருர் இவரே. திரு. வ. சு. செங்கல்வராயப் பிள்ளை அவர்கள், அக்காலத் தில் எழுந்த உரை நடை வளத்தையும், தாண்டவராய முதலியார் பணியையும் நன்கு எடுத்துக் காட்டியுள்ளார். தாண்டவராய முதலியாருக்கு முன்னமே மதுரைக் கந்தசாமிப் புலவர் தமிழ் மொழிக்குச் செய்த உரை {560)t தொண்டைத் திரு. செல்வக் கேசவராய முதலியார் அவர்கள் நன்கு எடுத்துக்காட்டியுள்ளார். இவர் விவகார சங்கிரகம்’ என்ற நூலே மொழி பெயர்த்துள்ளார் என அறிகிருேம். இவருடைய உரைநடை பெரும் பாலும் வடமொழிச் சொற்களைக்கொண்டே அமைந் துள்ளது எனவும் அறிகிருேம். இவ்வாறு சென்ற சில நூற்ருண்டுகளில் நம் தமிழ் நாட்டில் தமிழ் வளர்த்த புலவர்கள் ஒரு புறம் இருக்க, தமிழ் வாழும் பிற நாடுகளிலிருந்து வந்த பிறரும் தமிழுக்கு அரண் செய்தார்கள் எனக் காண்கின்ருேம். அவருள் தலே சிறந்தவர் யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக காவலர் அவர்கள். நல்ல நடையில் கதை, உரைநடை 1. History of Tamil Prose, p. 43. 2. தமிழ் வியாசங்கள், பக் 112, 3. டிெ பக் 46.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/188&oldid=874460" இலிருந்து மீள்விக்கப்பட்டது