பக்கம்:தமிழ் உரை நடை.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விற்கால உரையாசிரியர்கள் 181 இவரும் வடமொழிய்ை அதிகம் உபயோகித்தார். என்ருலும், இவருக்கு முன் உபயோகித்தவர்களைப் போன்று அத்துணைப் பேரளவில் உபயோகிக்கவில்லை என்னலாம். 'தினவர்த்த மானி' என்ற பத்திரிகை தோன்றிய கால மும் அதுவாகும். எனவே, பத்திரிகை வழித் தமிழ் உரைகடையை வளர்க்கத் தொடங்கிய காலத்தின் தொடக்க நாளாகிய அங்காளை நாம் மறக்க முடியாது. அதில் வீராசாமி செட்டியார் என்பவர் சில சில பழமொழி களே அமைத்து உரைநடையில் பல பொருள்களை எழுதி வந்தார் என அறிகிருேம். இவையெல்லாம் விநோதரச மஞ்சரியில் தொகுக்கப் பெற்றுள்ளன என அறிகிருேம். தமிழ் உரை நடையில் இதுவரை காணுத ஒரு புது வகை இலக்கியத்தை நாம் இப்போது எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழ் நாட்டில் பல்வேறு அரசியல் போராட் டங்களுக்கும், பிற நாட்டார் மொழி ஆதிக்கம் முதலிய வற்றிற்குமிடையே இந்த இரண்டொரு நூற்ருண்டுகளில் தமிழ் உரைநடை ஓரளவு வளர்ந்தது எனக் கண்டோம். அவற்றுள் ஒரு வகை உரைநடையே நாட்குறிப்பு.’ தத்தம் வாழ்வில் நடைபெறும் நிகழ்ச்சிகளையும், அங் காட்களில் நடைபெறும் காட்டு கடப்பு உலக நடப்பு முதலியவற்றையும் முறை தவ ரு ம ல் ஒழுங்காகக் குறித்து வைப்பார் தொகை தமிழ் நாட்டில் மிகக் குறை வானது. ஏன்? இல்லை என்றே கூடச் சொல்லிவிட லாம். மேலே காட்டில் ஒரு சிலர் இத்தகைய பழக்கங் களை மேற்கொண்டுள்ளனர் என அறிகிருேம். ஒரு சில நூற்ருண்டுகளாக அந்தப் பழக்கம் மேலே காட்டில் கிலவி வந்த போதிலும், தமிழ் நாட்டில் அவ்வாறு திட்டமாக காட்குறிப்பைக் குறித்து வைக்கும் வழக்கம் இல்லை என் —r தமிழ் வியாசங்கள், பக். 114.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/190&oldid=874463" இலிருந்து மீள்விக்கப்பட்டது