பக்கம்:தமிழ் உரை நடை.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 தமிழ் உரை நடை பேட்டி பண்ணிக்கொண்டார்கள். சா வி யும் ஒப்பிச்சுப் போட்டு தம்முட அதிகாரமும் அவர் வசம் பண்ணினர்கள்.' - ஒக்டோபர்-22, அற்பசி 10, செவ்வாய்க்கிழமை: காலமே சீர்மையாகிய பிரான்சுக்கு ஒரு கப்பல் பாயெடுத்து ஓடிப்போனன் அந்தக் கப்பல் பேர் பினிச்சு: கப்பல் கப்பித்தான் பேர் முசேபுரோ சேல். இந்தக் கப்பலிலே ஏற்றிய தட்டு 1001, செம் மரம் பாரம் 2000, மிளகு பாரம் 600, பின்னையும் சில்லறை தினுசுகளும் ஏற்றி காலமே கப்பல் பாயெடுத்துச் சீர்மைக்குப் பயணம் போனன். கோட்டைக்குப் பதினெரு பீரங்கியும் போட்டுப் பாயெடுத் தார்கள்." இக்காலத்தில் வாழ்ந்த இராமலிங்க அடிகளாரது மனு முறை கண்ட வாசகம் என்ற உரை நடை நூல் சிறந்த தாகும். அதுவும் மற்றும் அவர் எழுதிய பிற உரை நடை களும் கடிதங்களும் அக்கால உரை நடையை நன்கு நமக்குக் காட்டுகின்றன. இந்த நாளிலே எழுதிய வேதங்ாயகம் பிள்ளை யின் பிரதாப முதலியார் சரித்திரம் என்ற பெருங்கதை உரை நூலப் பற்றி அடுத்த பகுதியில் காண்போம். இன்னும் பலர் இக்காலத்தில் சிறு உரை நடை நூல்களும் இயற்றி யுள்ளனர். அவர்களின் பெயர்களையும் எழுத்துக்களையும் எடுத்துக் காட்டிக்கொண்டே செல்லின், எல்லே விரியும். எனவே, இக்காலத்தில் தமிழ் நாட்டு அறிஞர் வளர்த்த உரை நடை பற்றிய ஆய்வினை நிறுத்தி, ஏறக்குறைய இதே காலத்தில் நம் காட்டுக்கு வந்த மேலே நாட்டு அறிஞர்கள் தமிழ் இலக்கியத்தை-சிறப்பாக உரை நடையை-எவ் வெவ்வாறு வளர்த்தார்கள் என்பதை இனிக் காணலாம். 1. ைெடி பக். 181.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/193&oldid=874466" இலிருந்து மீள்விக்கப்பட்டது