பக்கம்:தமிழ் உரை நடை.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IX மேலை நாட்டார் தொண்டு கடந்த சில நூற்ருண்டுகளிலே தமிழில் ஏற்பட்டுள்ள உரை நடைத் தோற்றத்தையும், அதன் வளர்ச்சியையும் கண்டோம். அதே காலத்திலேதான் தமிழ் நாட்டிலும் பரந்த பாரதத்திலும் கிறித்துவம் அதிகமாகப் பரவலா யிற்று. அச்சமயச் சார்புடைய அரசாங்கம் இந்திய நாட்டில் கிலேத்து கின்ற காரணத்தால், அரசாங்கத்துணை கொண்டும் பிற வகையிலும் அச்சமயத்தை வளர்க்கப் பலர் பாடுபட்ட னர். மேலே நாடுகளிலிருந்து தம் மெய்ச்சமய நெறி பரப்ப வந்த கிறித்தவப் பாதிரிமார் பலர், அவர்கள் சமய நெறியை வளர்க்க வந்த வேளையில் தாங்கள் தங்கும் நாடுகளின் மொழியையும் நன்கு கற்று, அம்மொழிகளில் வல்லவர் களாகி, அம்மொழிகளிலேயே தங்கள் சமய உண்மையை அவ்வங் காட்டு மக்களுக்கு எடுத்து விளக்கினர்கள்; அத் துடன் கற்ற மொழியில் உள்ள சிறந்த இலக்கியங்களையும் போற்றி வந்தார்கள். தமிழ் நாட்டுக்கு வந்து தங்கள் சம -யத்தைப் பரப்பிய மேலே நாட்டுக் கிறித்தவப் பாதிரிமார்கள் அவ்வாறே தமிழ் மொழியைக் கற்று, தங்கள் சமயத்தை இம்மொழிவழிப் பரப்பினர்கள். அத்துடன் இங்குள்ள .பல நல்ல இலக்கியங்களைக் கற்று அவற்றைத் தத்தம் மொழியிலும் மொழி பெயர்த்தார்கள். ஒரு சிலர் தமிழ் மொழியிலேயே சில இலக்கிய இலக்கண நூல்களையும் எழு தினர். சிலர் கம்பராமாயணம் போன்ற இலக்கியங்களைப் பயின்று. அதே போலத் தம் சமய உண்மைகளே எடுத்துக் காட்டும் சில இலக்கியங்களையும் எழுதினர். குறள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/194&oldid=874467" இலிருந்து மீள்விக்கப்பட்டது