பக்கம்:தமிழ் உரை நடை.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*188 தமிழ் உரை நட்ை கொள்கையை நிலைநாட்டு முகத்தான் ம்ேலேங்ாட்டு அறிஞர் களே நமக்கு அறிமுகப்படுத்துகிருர்கள். தமிழில் முதன் முதல் உரை நடை நூல் எழுதியவர் வீரமாமுனிவரே எனப் பலரும் எண்ணியிருப்பதைத் தவறு எனக் காட்டி, பதினேழாம் நூற்ருண்டில் தமிழ் நாட்டில் வந்து, இங்கே வாழ்ந்த ராபர்ட்-டி-நோபிலி என்ற தத்துவ போதக சுவாமியார் அவர்களே முதல் முதல் தமிழில் தனி உரை நடை நூல்கள் எழுதியவர் எனக் காட்டுகின்ருர். பின்பு அவரை ஒட்டி வீரமாமுனிவர், சீகன்பால்கு ஐயர், போப்பு, கால்டுவெல் போன்ருர் தமிழ் உரை நடை நூல்களை எழுதித் தமிழ் இலக்கியப் போக்கிலேயே ஒரு திருப்பு மையத்தை அமைத் தனர் என்பதைக் காண்கின்ருேம். இவருள் சிலர் பாடல்கள் பாடியுள்ளாரேனும், பெரும்பாலோர் உரை நடையிலேயே தத்தம் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்கள் என அறி கிருேம். அவர்தம் உரை நடைகளே அப்படியே காணுமுன், அவர்கள் உரை நடையை அதிகமாகப் பயன்படுத்த நேர்ந்த காரணத்தைக் காண்போம் : . தமிழில் மிகு பழங்காலத் தொட்டு, உரை நடைக்கு இலக்கணம் இருப்பினும், புலவர் பலரும் செய்யுளிலேயே தத்தம் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். சாதாரணமாக ஒருவரோடொருவர் பேசிக்கொள்ளும் கருத்துரைகளெல் லாங்கூடச் சங்க காலத்தில் செய்யுள் நடையிலே இயல் வதைக் காண்கிருேம். கணவன் இறந்த பின் கனல் முழுக நினைக்கும் பூதப் பாண்டியன் தேவியார், கடந்த தைக் கருத்தில் நினைந்து ஏங்கும் பாரி மகளிர், அரசனுக்கு அறிவுறுத்த வந்த வெண்ணிக்குயத்தியார் போன்ற பெண்டிர் உட்படப் பலரும் செய்யுளிலேயே தத்தம் கருத்தைத் தெரி வித்துள்ளனர். காரணம் என்ன? அவர்கள் சிறந்த புலவர் களாய் இருந்தமை ஒன்று. அத்துடன் அக்காலத்தில் ஒல கயில் எழுத்தாணி கொண்டு எழுதும் பழக்கம் சுருங்கச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/197&oldid=874470" இலிருந்து மீள்விக்கப்பட்டது