பக்கம்:தமிழ் உரை நடை.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேலை நாட்டார் தொண்டு 189, சொல்லி விளங்க வைக்கும்முறையில் அவர்களைச்செய்யுளையே எழுகவைத்திருக்கும் என்பது மற்றென்று. ஆம் சொல்ல வேண்டிய பொருளைச் செய்யுளில் சுருக்கமாகச் சொல்லிவிட லாம். ஆனால், அது பலருக்கும் விளங்காது. என்ருலும், எழுதுவது சற்றுக் கடினமாகக் கருதிய காரணத்தாலும் அக் காலத்தில் பலர் கற்றறிந்தவராய் இருந்ததனலும், செய்" யுளேயே உரை நடையினும் அதிகமாக அக்காலப் புலவர்கள் இயற்றினர்கள். ! மேலே நாட்டிலிருந்து வந்த அறிஞர் பலரும் மக்களுடன் மிக நெருங்கிப் பழகியதோடு, தத்தம் கருத்தை எளிய வகை யில் பலருக்கு விளக்கித் தத்தம் சமயத்தை வளர்க்க நினைத் தனர். எனவே, அவர்கள் தங்கள் காட்டில் எளிமைக்கும் . பயன்படும் உரை நடை வழக்கையே இங்கேயும் கையாண் டார்கள் எனல் பொருந்தும். மற்றும், அவர்கள் நாடுகளில் அச்சுப்பொறி போன்ற நல்ல வெளியீட்டுச் சாதனங்கள் உருப்பெறத் தோன்றிய நாளிலே அவர்கள் இங்கு வந்தமை யும் மற்ருெரு காரணமாகும். உரை நடையில் தங்கள் கருத்தை எளிய முறையில் எழுதி ஆயிரக் கணக்காக அச் சிட்டு, கற்ருர்க்கும் மற்ருர்க்கும் வழங்கி, அதன் வழியில் தங்கள் சமயம் வளர்க்கக் கருதியும் உரை நடையை விரும்பி எழுதினர்கள் எனக் கொள்ளலாம். மேலும், அவர்கள் நாடு களில் அன்றும்-என்-இன்றுங்கூடச் செய்யுள் நடையி லும் உரை நடையே சிறந்த வகையில் அதிகமாக எழுதப் படுவதைக் காண்கிருேம். அதே நிலையில் அங்காடுகளிலி' ருந்து தமிழ் மண்ணில் சமயப் பணியாற்ற வந்த மேலே நாட்டு அறிஞர்கள் செய்யுளிலும் உரை நடையையே தங்கள் பணிக்கு ஏற்ற சாதனமாகக் கொண்டார்கள் என்பது, பொருத்தமானதாகும். 1. கிறித்தவமும் தமிழும், பக். 17.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/198&oldid=874471" இலிருந்து மீள்விக்கப்பட்டது