பக்கம்:தமிழ் உரை நடை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரைநடையின் தோற்றமும் வளர்ச்சியும் 1 to கூறுவன எல்லாம் உரை நடைக்கு வகுத்த இலக்கணங்க ளன்றி வேறென்ன? செய்யுள் இயலிலும், உவம இயலிலும் சிறப்பாகப் பாட்டின் இலக்கணத்தையும், பொது இலக்கண அமைப்பில், அளபெடை, வழுவமைதி போன்ற செய்யுள்களுக்கு. வேண்டிய சில சிறப்பிலக்கண நெறிகளையும் விதந்து கூறிப் பாட்டின் நலத்தை விளங்க வைத்த இலக்கண ஆசிரியர்கள், பிற எல்லாவற்றையும் உரை நடை இலக்கணத்துக்காக அமைத்துள்ளார்க ளன்ருே? ஒருமைப் பன்மை இலக்கண மும், உயர்திணை அஃறிணை இலக்கணமும் சொல்லாக்கங்’ களின் இலக்கணங்களும் பிற அனைத்தும் சாதாரணமாக, மொழியை எழுதவும் பேசவும் பயன்படுகின்றவை அல்லாது. வேறு என்ன? எனவே எந்த மொழியிலும் இலக்கண அமைப்புகளுள் பெரும்பாலர்னவை உரை நடை பற்றி" வந்தன என்று கொள்ளலே பொருந்துவதாகும். இவ்வாறு வரையறை செய்யப்பட்ட இலக்கண வரம் புக்கு உட்பட்ட உரைகடையே மொழியில் பாட்டு உண்டா வதற்கு முன் தோன்றியிருக்க வேண்டும். மனிதன் மொழி' யறிந்து, எழுத்துணர்ந்து பேசத் தொடங்கிய அந்தக் க்ாலத் தில் பாட்டிலேயே பேசினன் என்பது சிறிதும் பொருந்தாத ஒன்ருகும்.மொழி, ஒருவர் உள்ளத்துத் தோன்றிய எண்ணங் களே மற்றவருக்குப் புலப்படுத்தப் பயன்படுவதேயாகும். அந்தத் தொடக்க காலத்திலேயும் மொழி இதே பணியைத் தான் செய்து வந்தது. எனவே, மற்றவருக்குத் தன் கருத்தை, விளக்க விரும்பிய ஒருவன், கேட்பவர் புரிந்துகொள்ளும், வகையில் எளிய முறையிலேதான் பேசியிருக்கவேண்டும். சொல், சொல்லாக வளர்ந்ததுதான் மொழி. முதலில் சிற்சில சொற்களே வழக்கத்தில் இருந்திருக்கும். வாழ்வின் இன்றி" யமையாத் தேவையான பொருள்களுக்கே மனிதன் முதன் முதல் சொற்களே ஆக்கிக் கொண்டிருப்பான். அச்சொற்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/20&oldid=874474" இலிருந்து மீள்விக்கப்பட்டது