பக்கம்:தமிழ் உரை நடை.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 தமிழ் உரை நடை இந்த நீண்ட பெருவாக்கியம் காண்பவருக்கு இவர் தம் தமிழ் எழுத்தின் திறன் நன்கு விளங்கும். இனி இவரை அடுத்து, பெஸ்கி எனப்பட்ட வீரமாமுனிவர் செய்த உரைநடைத் தொண்டைக் காண்போம்: வீரமாமுனிவர் இத்தாலி நாட்டிற்பிறந்துபெஸ்கி' (Beschi) என்ற பெயர் கொண்டவராய்த் துறவு நிலையை மேற்கொண்டு, தம் கிருத்து சமயப் பணிவழித் தமிழ்நாடு வந்தவர், இங்கே மதுரையைத் தமக்குரிய இடமாக அமைத்துக்கொண்டார். ஈண்டு மதுரையிலே இவர் தமிழ் மொழியைக் குற்றமறக் கற்றறிந்தார். இவர் சைவ உணவையே உண்டு வந்தார் என்பர். நெற்றியில் இந்துக்கள் போலக் கோபி சந்தனம் அணிந்துகொள்வா ராம், தமிழ் நாட்டு முறைப்படி வேட்டி உடுத்துவாராம்; அது காவி நிறத்ததாய் இருக்குமாம்; புலித்தோலாசனத் தில் உட்காருவாராம். இவ்வாறு தமிழ் நாட்டுத் துறவி யர் நிலையிலேயே இவர் வாழ்ந்தார் என அறிவதோடு, இவர் சிறந்த தமிழ்ப் புலமையும் பெற்று விளங்கினர் எனவும் அறிகிருேம். இவர் பல பாடல்களைப் பாடியதோடன்றி, பேரிலக் கியங்களும் இலக்கண நூலுங்கூட எழுதியுள்ளார். இவர் எழுதிய தொன்னூல் விளக்கம், இலக்கணம் பற்றியதாகும். அதில் இவர் எ கர ஒ' கரங்களுக்குத் தொல்காப்பியர் காலத்திலிருந்து வந்த புள்ளி வைக்கும் குறியீட்டை மாற்றி மேல் நீண்ட கோடு அமைக்கும் வழியை யிட்டு அமைத்தார் என அறிகிருேம். இலக்கணம் மட்டுமன்றித் தமிழில் முதல் முதல் அகராதி எழுதியவரும் இவரே. நிகண்டு, திவாகரம் போன்ற பழங்காலச் சொற்பொருளு ணர்த்தும் நூல்கள் இருப்பினும், மேலைநாட்டு அகராதி முறையை அடிப்படையாகக்கொண்டு இவர் சதுரகராதி'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/203&oldid=874482" இலிருந்து மீள்விக்கப்பட்டது