பக்கம்:தமிழ் உரை நடை.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேலை நாட்டார் தொண்டு 195 என்ற ஒன்றை எழுதினர். இதுவே தமிழில் தோன்றிய முதல் அகராதி என்பர். இவர் பல செய்யுள் நூல்களை இயற்றியுள்ளார். தேம்பாவணி அவற்றுள் சிறந்தது. திருக்காவலூர்க் கலம்பகம் போன்ற சிற்றிலக்கியங்களையும் இயற்றியுள்ளார். இவர் எழுதிய உரைநடை நூல்கள் வேதியர் ஒழுக்கம், வேத விளக்கம், பேதக மறுத்தல், ஞானம் உணர்த்தல், திருச்சபைக் கணிதம், வாமன் கதை, பரமார்த்த குரு கதை என்பன. இவை அனைத்தும் சிறந்த வகையில் போற்றப்படுகின்றன. இவருடைய செய்யுள் நூல்களில் பழங்கால இலக்கியங்களாகிய திருக்குறள், கம்பராமா யணம், சிந்தாமணி போன்றவற்றின் சாயல்களை நன்கு காணலாம். உரைநடை நூல்கள் மொழிக்கே புதியன வானமையின், இவர் தம் தனிப்போக்கு நெறியிலே அவற்றை அமைத்துள்ளார். எனினும், இவர் எடுத்து விளக்கும் பொருள்கள் தமிழ் நாட்டுப் பழங்கால வாழ் வில் காட்டப்பட்ட பொருள்களாகவே அமைகின்றன என்னலாம். அவற்றுள் சிறந்ததாகிய'அறன் என்னும் பொருள் பற்றிய திரு. சீனி. வேங்கடசாமி அவர்கள் எடுத்துக் காட்டிய இவர் உரைநடைப்பகுதியிலிருந்து நாமும் சிறிது கண்டு மேலே செல்லலாம் வேத நூன் முதலெவ்வகை நூலுக் கல்லா துணரவுஞ் சொல்லாலுணர்த்தவும் வல்லவராடு, மெய்ஞ்ஞானத் திருக்கடலாகிய வொருமெய்க் கடவுடன் றிருவடிமலரே தலைக்கணியெனக் கொண் டேத்தி, இருளிராவிடத்து விளங்கிய வொருமின் போலவும். பாலேச்சுரத் தரிதலர்ந்த பதுமம் போல வும் மெய்யா ஞ் சுருதி விளக்கா திருளே மொய்த்த நாட்டின் கண்ணுங் கடவுளேற்றிய ஞானத் திரு விளக்கெரிப்பத் தெளிந்து, உணர்ந்தெங்கும் ஒரு 1. கிறித்துவமும் தமிழும் பக். 89.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/204&oldid=874484" இலிருந்து மீள்விக்கப்பட்டது