பக்கம்:தமிழ் உரை நடை.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 தமிழ் உரை நடை போப்பு ஐயரைப் பற்றி அறியாதார் இரார். ஆங்கில காட்டிற் பிறந்து தம் அருஞ்சமயத் தொண்டு கருதித் தமிழ் நாட்டு நெல்லையிலும். தஞ்சையிலும், உதகையிலும் பல ஆண்டுகள் அரும்பணி செய்த இவர், தக்க நல்லாசிரியர் களிடம் தமிழைப் பயின்று, அத்தமிழ் நலத்தால் கட்டுண் டவர். குறள், நாலடியார் போன்ற இலக்கிய நூல்களே யன்றித் திருவாசகம் எனும் சைவ சமய நூலேயும் ஆங்கிலத் தில் மொழி பெயர்த்தவர் இவர். இவர் தமிழ்ச் செய்யுட் கலம்பகம' என்ற ஒரு தொகுப்பு நூலே வெளியிட்டதாகவும் அறிகிருேம். மொழிபெயர்ப்பு, தொகுப்புப் பணியேயன்றி. இவர் உரை வளர்ச்சிக்குச் செய்த பணியும் சிறந்த பணியே யாகும். சமயப் பணிக்கான சில சில துண்டுப் பிரசுரங்களே இவர் எழுதி வெளியிட்டதோடு, சமய உண்மைகள் பொதிந்த கட்டுரைகள் பலவும் வெளியிட்டுள்ளார் எனவும் அறிகிருேம். இவர் உரை நடைக்கு ஒரு கான்று கண்டு. மேலே செல்லலாம். 'இந்தச் சபையோருக்குள்ளே சிலர் வேதத் திலே தேர்ந்தவர்களும் யோக்கியமுள்ளவர்களுமா யிருந்து மற்றவர்களுக்குப் பிரசங்கிக்கத் தொடங் கின போது இவர்களைக் கடவுள் தாமே தெரிந்து கொண்டு இவர்களுக்குத் தகுந்த வரத்தைக் கொடுத்தாரென்று வெஸ்லி ஐயர் எண்ணி, இது நல்ல காரியமென்று சொல்லி அவர்களுக் குத்தரவு கொடுக்கிறதை அநேகர் கண்டு, குருப்பட்டமடைந் தவர்கள் தவிர மற்றவர்கள் பிரசங்கம் பண்ண லாமாவென்று சொல்லி விசனப்பட்டார்கள். வெஸ்லி ஐயரோவெனில் பராபரன் தாமே ஒரு. மனிதனைத் தம் ஊழியத்துக்குத் தெரிந்து கொண் டால் நான் பராபரனை எதிர்த்து நிற்கக் கூடுமா 1. கிறித்தவமும் தமிழும், பக். 106.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/207&oldid=874490" இலிருந்து மீள்விக்கப்பட்டது