பக்கம்:தமிழ் உரை நடை.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேலை நாட்டார் தொண்டு 199 வென்று மாறுத்தரஞ் சொல்லித் தேவபக்தியுள்ள அநேகருக்குப் பிரசங்கிக்க உத்தரவு கொடுத்து வந்தார்.' டாக்டர் கால்டுவெல் அவர்கள் திராவிடமொழி ஒப்பி லக்கணத்தை எழுதி உலகில் தமிழ்க் குடும்பத்தின் புகழை உயரச் செய்தவராவர். அயர்லாந்து நாட்டில் பிறந்த இவர், தம் சமயப் பணிக்காகவே தமிழ் நாடு வந்து, நெல்ல மாவட் டத்திலிருந்து நெடுங்காலம் பணியாற்றியவர். இவரது உயர்ந்த ஒப்பில்க்கணம் உலகம் உள்ளளவும் சிறந்ததாகப் போற்றப்படும் ஒன்ருகும். இவர் உரை நடைக்குச் செய்த தொண்டையே நாம் இங்கு கினைத்துப் பார்க்க வேண்டும். நற்கருணைத் தியான மாலை, தாமரைத் தடாகம் என்னும் இரு நூல்களையும், ஞானஸ்நானம், நற்கருணை என்னும் இரு கட்டுரைகளையும் இவர் எழுதினர் என அறிகிருேம்." இவரது உரை நடைக்கும் ஒரு சான்று காணல் கன்று என எண்ணுகிறேன் : 'சகல ஞானத்தையும் ஈகிறவரே, நான் எனது இருதயத்தை எப்படி ஆராய்ந்தாலும், உமது விருந் துக்கு என்னை எப்படி எத்தனப்படுத்திலுைம், உம் முடைய உதவியும் ஆசீர்வாதமும் இல்லாமல் என் முயற்சிகளெல்லாம் விருதாவாய்ப் போகும்; நீரே என் கண்களைத் திறந்து என் இருதயத்தை இளகச் செய்யாவிட்டால், என் பாவங்களை நான் அறிந்து கொள்வ தெப்படி? நீரே விசுவாசந் தராவிட்டால், நான் கிறிஸ்து ரட்சகரின் கிருபையைச் சார்ந்து அவர் மேலேயே முழு நம்பிக்கையை வைப்ப தெப்படி? நீரே உம்முடைய ஆவியினலே என்னைச் சுத்திகரியா விட்டால், அசுத்தமும் தீவினையும் 1. கிறித்தவமும் தமிழும், பக். 108. 2. டிெ பக். 110.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/208&oldid=874492" இலிருந்து மீள்விக்கப்பட்டது