பக்கம்:தமிழ் உரை நடை.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 தமிழ் உரை கடை என்னில் நிலைக்கும். ஆகையால் என் தேவனே! உம்மிடத்தில் வருகிறேன். நீரே என் இருதயத்தை எனக்குக் காண்பித்து, உமது பந்தியைச் சேருதற் கேற்ற குணங்களையும் ஆயத்தத்தையும் எனக்குத் தாரும். கேட்கிற எனக்குக் கொடும்; தேடுகிற நான் கண்டடையச் செய்யும்; தட்டுகிற எனக்கு வாசலைத் திறந்தருளும். ஆமன்.' இவர்களேயன்றி, இன்னும் சில மேலே காட்டு மக்களும் நம் நாட்டுக்குச் சமயப்பணி கருதியும் அரசியல் அலுவ லேற்றும் வந்த காலை இங்குள்ள தமிழ் மொழி, பண்பாடு, கலே நலம், பிற இயல்புகள் ஆகியவற்றைக் கண்டு, கற்று, பின்பற்றி வாழ்ந்ததோடு அவற்றையெல்லாம் வியந்து போற்றி ஆங்கிலத்திலேயே எழுதியும் வைத்துள்ளார்கள். அவை பற்றி கண்டு நாம் ஆராய வேண்டா. இது நிற்க. இம்மேலே காட்டு மக்கள் உரை நடைக்குச் செய்த தொண்டுகளே எண்ணும் போது, இவர்கள் சமயத்தினைச் சேர்ந்த தமிழ் காட்டுக் கிறித்தவர்தம் நல்ல உரைநடைத் தொண்டும் நமக்குத் தெரிகின்றது. மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்கள் உரை நடைக்குச் செய்த தொண்டு சிறந்ததாகும். இவர் செய்யுளில் சில நூல்களும், சில கீர்த்தனைகளும் இயற்றியிருக்கிருர். இவர் செய்த இரண்டு உரை நடை நூல்களும் தமிழ் உரை நடைப் பாதையிலே சிறந்த இடத்தைப் பெற்றுள்ளன. அவை பிரதாப முதலியார் சரித்திரம், சுகுணசுந்தரி சரித்திரம் என்பன. அவற்றில் இவர் தம் கால கிலேக்கு ஏற்பப் பல வட சொற்களேப்பெய்து எழுதினர். அவற்றுள் முன்னதை அண்மையில் வெளி யிட்ட சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் அவ்வட சொற் களையெல்லாம் விலக்கித் தனித் தமிழ்ச் சொற்களேயெல் லாம் பெய்து அச்சிட்டுள்ளனர். அவர்தம் தனித் தமிழ்த் தொண்டு போற்றத் தகுவதே. என்ருலும். இவ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/209&oldid=874494" இலிருந்து மீள்விக்கப்பட்டது