பக்கம்:தமிழ் உரை நடை.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 - தமிழ் உரை கடிை செடிகளின் பெயர்கள் மட்டும் தமிழில் இருந்தனவாம். ஜெர்மனி நாட்டில் பின்பு சில தமிழ் நூல்கள் அச்சேறின. போலும் இத்தாலி நாட்டு உரோமாபுரியிலும் தமிழ் நூல்கள் அச்சிடப் பெற்றன. முதல் தமிழ் அச்சுப் புத்தக மாகக் கி. பி. 1577 ல் கிறிஸ்தவ வேதோபதேசம் என்னும் நூல் தமிழ் காட்டில் வைப்புக் கோட்டை என்னும் ஊரில் அச்சிடப்பெற்றதாக அறிகிருேம். 1575 ல் தமிழ்ப் புத்தகம் முதல் முதல் அச்சிடப்பெற்றது என அறிஞர் வையாபுரிப் பிள்ளை அவர்கள் கூறுகின்ருர்கள். அதை அடுத்துக் கிறித்தவ வணக்கம் அச்சிடப் பெற்றது போலும் இவை: இரண்டும் தமிழ் நூல்களே என்பதை ஆசிரியர் சீனி. வேங்கடசாமி அவர்கள் நன்கு விளக்குகிருர்கள். பின்னர்ப் பலப்பல நூல்கள் வெளி வந்துள்ளன. இவ்வாறு தம் சமயம் பரப்ப வந்த மேலே நாட்டுக் கிறித்தவ மக்கள் தமிழால் கட்டுண்டு, தாமே தமிழராகி, தமிழ் மொழி வளரப் பல வகையில் உதவி நின்ருர்கள் என்னலாம். அவர்களது உயரிய துணை இல்லையாயின் இன்று நாட்டிலே வளர்ந்துள்ள இத்துணை உரை நடை. நூல்களும் பிறவும் வளர்ந்திருக்குமா என்பது எண்ணத் தக்கதாகும். எனவே, தமிழ் நாட்டு மக்கள் இம்மேலே. காட்டு அறிஞர்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டவர்கள் என்பதை மறத்தலாகாது. 1. கிறித்தவமும் தமிழும் பக். 34, 35. 2. இலக்கியச் சிந்தனைகள், பக். 128.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/211&oldid=874500" இலிருந்து மீள்விக்கப்பட்டது