பக்கம்:தமிழ் உரை நடை.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

X இருபதாம் நூற்ருண்டின் விடியலிலே தமிழ் உரை நடையின் பெருவளர்ச்சி இருபதாம் ஆாற்ருண்டை ஒட்டியே அமைந்தது என்னலாம். சென்ற: நூற்ருண்டின் இறுதியிலும் இந்த நூற்ருண்டின் தொடக் கத்திலும் அறிஞர் பற்பலர் தோன்றித் தமிழ் இலக்கியத் தையே வளம்படுத்தினர். இருக்குமிடம் தெரியாது மறைந்து கிடந்த சங்க இலக்கியங்களும், காப்பியங்களும் இக்காலத் திலேதான் ஒன்றின்பின் ஒன்ருக வெளிவரலாயின. இலக் கண நூல்களும் அவற்றின் உரைகளும் இருந்த இடத்தி லிருந்து வெளிக்கிளம்பித் தங்களே மக்களுக்கு அறிமுகம் செய்துகொண்ட காலமும் இதுதான். அத்துடன் நாளிதழ் திங்கள் இதழ் என்னும் வகையில் தமிழில் பத்திரிகைகள் தோன்றி நாட்டு மக்களுக்கு அறிவையும் உணர்வையும் ஊட்டத் தொடங்கிய காலமும் இதுதான். யாழ்ப்பாண நாட்டிலிருந்து தமிழ்ப் புலவர் சிலர் இங்கு வந்து தமிழ். வளர்த்த காலமும் இதுவே. மற்றும் தமிழின் தொன்மை பற்றியும் செழுமை பற்றியும் தமிழரல்லாப் பிறரும் அறிந்து கொள்ளும் வகையில் ஆங்கிலத்திலே சிற்சில நூல்கள் எழுதி' வெளியிட்டனர். பல கட்டுரைகள் தமிழிலும் ஆங்கிலத்தி லும் தமிழ் மொழி பற்றி வெளி வரலாயின. சுருக்கமாகக் கூறின், இன்று தமிழ் நாடு வளர்ச்சி பெற்றுள்ளமைக்கு. அடிப்படையாயமைந்தவர்கள் இந்த நூற்ருண்டின் தொடக் கத்திலும் சென்ற நூற்ருண்டின் பிற்பகுதியிலும் வாழ்ந்த புலவர்களேயாவார்கள் எனக் கூறலாம். ஈண்டு உரை நடை அளவில் நாம் நோக்குவோம். உரை கடை இந்த நூற்ருண்டின் விடியலிலே ஓரளவு நன்கு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/212&oldid=874502" இலிருந்து மீள்விக்கப்பட்டது