பக்கம்:தமிழ் உரை நடை.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபதாம் நூற்றண்டின் விடியலிலே 205, 'பழைய சுவடிகள் யாவும் கிலமாய் ஒன்ருே டொன்ருய் அழிந்து போகின்றன. புது ஏடுகள் சேர்த்து அவற்றை எழுதி வைப்பாரும் இலர், துரைத்தனத்தாருக்கு அதன்மேல் இலட்சியமில்லை. சரஸ்வதியைத் தம்பால் வகிக்கப்பெற்ற வித்வான் களை அவள் மாமி எட்டியும் பார்க்கிருள் இல்லை. திருவுடையீர்! நுங்கருணை இந்நாள் தவறினல், பின்பு தவம் புரிந்தாலும் ஒரு தரம் அழிந்த தமிழ். நூற்களை மீட்டல் அரிது. யானை வாய்ப்பட்ட விளாம்பழத்தைப் பின் இலண்டத்துள் எடுத்து. மென்? ஒடன்ருே கிட்டுவது? காலத்தின் வாய்ப் பட்ட ஏடுகளைப் பின் தேடி எடுப்பினும் கம்பையும் நாராசமுந்தான் மீரும்.' . என்றும் இன்னும் பல வகையிலும் கேட்பாரற்றுச் செல் லுக்கு இலக்காகி கிற்கும் நல்ல தமிழ் ஏடுகளை வெளிக். கொணர வேண்டிய இன்றியமையாமையை வற்புறுத்து கிருர். அவர் வேண்டுகோளின்படி பல தமிழ் இலக்கி யங்கள் வெளி வந்தன. அத்தொண்டில் தளராது உழைத் துப்பாடுபட்ட நல்ல தமிழறிஞர் டாக்டர் உ. வே. சாமிநாத, ஐயர் அவர்களைத் தமிழுலகம் என்றென்றும் மறவாது. அவர்கள் காடெலாம் உழன்று நல்ல தமிழ் நூல்களைத் தேடித் தொகுத்து வெளியிட்டதோடு, தமிழ் உரை நடை யையும் வளர்த்தார்கள் என்பது பொருந்தும். ஒவ்வொரு நூலின் விளக்கத்தையும், முன்னுரையையும் நல்ல தமிழில் - உரை கடையில் - எழுதியுள்ளார்கள். மற்றும், என் வாழ்க்கைச் சரித்திரம் போன்ற உரை நடை நூல்களையும் பின்னட்களில் எழுதி வெளியிட்டிருக்கிருர்கள். எனவே, அவர்கள் சிதைந்த ஏடுகளைச் செப்பனிட்டு வெளியிட்ட பணியோடு, தமிழ் உரை நடை வளர்ச்சி பெறவும் சிறந்த, 1. தமிழ்ச்சுடர் மணிகள், பக். 216.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/214&oldid=874507" இலிருந்து மீள்விக்கப்பட்டது