பக்கம்:தமிழ் உரை நடை.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபதாம் நூற்ருண்டின் விடியலிலே 207 இந்தக் காலத்திலே பல நாளிதழ்கள் உருவாயின. இக்காலத்தின் தமிழ் வளர்ச்சியில் - சிறப்பாக உரை கடை வளர்ச்சியில்-நாளிதழ், திங்கள் இதழ், கிழமை இதழ் போன்றவைகளுக்குப் பெரும் பங்கு உண்டு. இன்று காட்டில் உலவுகின்ற சுதேச மித்திரன் தமிழ்த் தினசரி அக்காலத்தில் தோன்றியதுதான். என்ருலும், இன்று உள்ள அதன் தமிழ் நடைக்கும் அன்றைய நடைக்கும் மிக்க வேறுபாடு உள்ளது என்பதைப் பெரியோர்கள் அறிவார்கள். காலகிலேக்கு ஏற்ப மாறிச் செல்லும் கடப் பாட்டில் இன்று ஓரளவு தமிழ் கலத் துறையில் அதன் கடை செல்கிறது என்ருலும், அன்று அது அத்தமிழ் .கடையில் செல்லவில்லை என்பதைக் காலஞ்சென்ற திரு. வி. க. போன்ற பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக் கிறேன். திரு. வி. க. வின் நாளிதழாகிய தேச பக்தன்' நடையை நையாண்டி செய்யும் வகையில் சில நிகழ்ச்சிகள் கடந்ததாகவும், பின் தம் வாழ்நாளிலேயே அவ்விதழ் தம் நடையைப் பின் பற்றத் தொடங்கியது கண்டு மகிழ்ச்சி அடைந்ததாகவும் அவர்கள் கூறக் கேட்டிருக்கி றேன். எவ்வாருயினும், தமிழ்ப் பத்திரிக்கைத் தொழி லில்-அதிலும் நாளிதழ் கடத்தும் பெரும்பொறுப்பில்முதல் நின்று அதை இடைவிடாது இன்று வரை நடத்தி வரும் அவர்களுக்கு-அதன் உரிமையாளர்களுக்கு-தமிழ் மக்கள் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிருர்கள். அன்று தொட்டு இன்று வரை தமிழ் நாட்டு இலக்கிய வளர்ச்சியில்-சிறப்பாக 9_ᎶᏡᎬᎢ EᎶᏡᎠt_ வளர்ச்சியில்இதற்குப் பெரும்பங்கு உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்த நாளிதழைத் தவிர்த்து, அக்காலத்தில் -தினவர்த்தமானி' என்ற ஒரு நாளிதழும் நடந்து வந்ததை அறிகிருேம். அதில் வெளி வந்த பல பொருள்களைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/216&oldid=874510" இலிருந்து மீள்விக்கப்பட்டது