பக்கம்:தமிழ் உரை நடை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரைநடையின் தோற்றமும் வளர்ச்சியும் 13; யில் அம்மொழி நிலைத்து கின்று வேறு பெருமாற்றங் களுக்கு இடமில்லாத வகையில் அமைந்து நிற்கும். ஆம். இந்த நிலையைத் தமிழ் மொழி இரண்டாயிரம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே பெற்று விட்டது. என்னலாம். எனவே, அதற்கு முன்பே உரையும் பாட்டும் தோன்றி தமிழ் மொழியைச் சிறக்கவைத்தன என்பது. பொருந்தும். - உரைநடை பாட்டினும் முந்திய ஒன்று என்பதைத் தொல்காப்பியம் வாயிலாகவும் நிறுவ வழி உண்டு. செய்யுள் என்னும் சொல் செய்யப்படும் அனைத்துக்கும் பொருந்துவதாகும். சொல்லேக் கொண்டு செய்யப் பெறு: வதே செய்யுள். சொற்கோவை உரையாய் இருப்பின் உரைச் செய்யுள் எனவும், அதே சொற்கோவை பாட் டாய் இருப்பின் பாச் செய்யுள் எனவும் வழங்கப் பெறும். இச்செய்யுள் வகையையும் சிறப்பையும் பிறிதோரிடத் தில் காணலாம். இங்குச் செய்யுள் இலக்கணம் கூறவந்த, தொல்காப்பியனர், அங் த இயலில் உரை, பாட்டு. இரண்டையுமே அடக்கிக் காட்டுகின்ருர். அவ்விரண்டினுள் எது தொன்மை வாய்ந்தது என்பதையும் அவர் காட்டத். தவறவில்லை. தொல்காப்பியச் செய்யுளியல் 238-ஆம் குத்திரம், தொன்மை தானே உரையொடு புணர்ந்த பழைமை மேற்றே ' என்பதாகும். இது உரைபற்றி நன்கு விளக்குகின்றது. என்பதை யாரே மறுக்கவல்லார்? இதற்கு உரையெழுத: வந்த இளம்பூரணர், நிறுத்த முறையானே தொன்மைச் செய். யுள் உணர்த்துதல் நுதலிற்று' என்று கூறி, தொன்மை யாவது, உரையொடு பொருந்திப் போந்த பழமைத்தாகிய பொருண் மேல் வருவன. அவை இராம சரிதமும் பாண்டவ சரிதமும் முதலாகியவற்றின்மேல் வரும் செய்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/22&oldid=874519" இலிருந்து மீள்விக்கப்பட்டது