பக்கம்:தமிழ் உரை நடை.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபதாம் நூற்றண்டின் விடியலிலே 211 சிறிது திருந்திய வகையில் நல்ல தமிழில் மொழி பெயர்ப்பு நூல்களே ஆக்க முயன்ருர்கள். என்ருலும், அவர்கள் முழு வெற்றி பெறவில்லை என்னலாம். இன்றளவும் அவர்தம் விவிலிய நூலுக்குத் துளய தெளிந்த தமிழில் சிறந்த ஒரு மொழி பெயர்ப்பு நூல் இல்லாததை அவர்களே உணர்ந்து கூறியுள்ளார்கள். இன்று சிறந்த தமிழறிஞர் சிலர் அச் சமயத்தில் உள்ளமையின் ஒரு வேளை இனிச் சிறந்த தமிழ் மொழி பெயர்ப்பு வர வாய்ப்பு ஏற்படலாம். இக்காலத்தில் வாழ்ந்த ஆறுமுக நாவலர் தம் உரை கடை, சமயச் சார்பு பற்றியிருந்த காரணத்தால், வட மொழிச் சொற்கள் அதிகமாகவே கலக்கப் பெற்றதாக இருப்பதைக் காணலாம். மேலும் வடசொற்களைக் கலந்து எழுதலாமா கூடாதா என்ற ஆராய்ச்சி அக்காலத்தில் எழ வில்லை. எனவே, அவர் உரை நடையில் அதிக வடமொழிச் சொற்கள் இடம் பெறுகின்றன. தமிழ் உரை நடைக்கு அவர் செய்த தொண்டு அளவிடற்களிது. உரை நடையில் பல இலக்கியங்களைப் பெயர்த்து எழுதியது மட்டுமன்றி, அவைகளே அழகுற அச்சிட்டு வெளிக் கொணர்ந்த பெருமை யும் அவர்களேயே சாரும். தமிழ் நூல்களைப் பிழையில்லா மலும், திருத்தமாகவும், அழகாகவும் முதன் முதல் அச்சிட்ட பெருமை அவர்களேயே சாரும். நாவலர் பதிப்பு' என்பது இன்றும் தனி மதிப்புடையதென்பதை யாரும் அறிவர் அவர் உரை நடையில் பல நூல்கள் எழுதியுள்ளார். சிறப் பாகச் சைவ சமய நூல்கள் பல அவர் வழி உரை நடையில் வெளிவந்தன. சமய உண்மைகளைக் கூறும் அவர்தம் உரை கடை சில போழ்து சற்றுக் கடினமானதாய் இருப்பினும் புராண சம்பந்தமான கதைகளைக் கூடிய வரை எளிய நடை யிலேயே எழுதியுள்ளார் என்றே சொல்ல வேண்டும். இங்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/220&oldid=874521" இலிருந்து மீள்விக்கப்பட்டது