பக்கம்:தமிழ் உரை நடை.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபதாம் நூற்ருண்டின் விடியலிலே 243 நூல்கள் அதிகமாக வழக்கத்தில் இல்லாததற்குக் காரணம் அவை பெரும்பாலும் சமயம் பற்றியனவாயிருத்தலேதான். இது கிற்க. காவலரைப் போன்றே சமய நெறி வளர்த்த மற்ருெரு பெரியார் அருட்டிரு இராமலிங்க அடிகளார் ஆவார். அவர் தம் பாடல்கள் அருட்பா' என்னும் தொகுதியாக மக்கள் உள்ளங்களில் இடம் பெற்று விளங்குகின்றன. பலர் அவற்றை இன்று படித்து நலம் பெறுகின்றனர். அவர் தம் பாடல்கள் எளிமை வாய்ந்தன. அவர் பாடல்களேயன்றிச் சில உரை நடை நூல்களையும் செய்துள்ளார். சமயச் சார் பான உரைநூல்க ளானமையின், நாம் காவலர் உரையிற் கண்டபடி அவருடைய உரையிலும் வடமொழி சொற்கள் அதிகம் இருக்கக் காணலாம். உரை நடை நூலுள் சிறந்தது 'சீவகாருண்ய ஒழுக்கம்' என்பதாகும். மக்கள் வாழ்வில் எளிமையும் தூய்மையும் மேற்கொண்டு வாழ்ந்து எவ்வு யிரையும் ஒத்து நோக்க வேண்டும் என்ற கொள்கையை அவர் கடைப்பிடிப்பவர். இக்கருத்துக்களை நன்கு வலியு ஆறுத்தும் உரை கடைப் பகுதியே சீவகாருண்ய ஒழுக்கம். அதிற் சில பகுதிகளைக் கண்டு மேலே செல்லலாம். "எளிமை: பசித்த ஜீவர்களுக்கு ஆகாரத்தால் பசியை நிவர்த்தி செய்விக்கின்ற தயவுள்ளவர் களுக்குச் சுதந்திரமற்ற ஜீவர்களது எளிமையை நீக்கத் தயவு வாராம லிராது. பசியினல் வருந்து கின்ற எளிமைக்கு மேற்பட்ட எளிமையே இல்லை. எளிமையைச் சில நாள் சென்று மாற்றிக் கொள்ளக் கூடும். பசியை அவ்வாறு மாற்றிக் கொள்ளக் கூடாது. எளிமையோடு தேகத்தை வைத்திருக்கக் கூடும் பசியோடு வைத்திருக்க முடியாது.' 1. திருவருட்பா, ஆரும் பகுதி, பக். 11.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/222&oldid=874525" இலிருந்து மீள்விக்கப்பட்டது