பக்கம்:தமிழ் உரை நடை.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 தமிழ் உரைநடை 'தேக முழுதும் நரம்புகள் தோன்றப் பசியினல் இளைத்து உயிரொடுங்கி மூர்ச்சை முடிய காலத்தும் அயலாரைக் கேட்பது துணியாமற் கடவுளே நினைத்து நினைத்து, நெருப்பிற் படுத்து நித்திரை செய்யத் தொடங்குவாரைப் போல, அடிவயிற்றிற் கொடிய பசி நெருப்பை வைத்துப் படுக்கத் தொடங்குகின்ற விவேகிகளுக்கு ஆகாரங் கொடுத்து அந்தப் பசியை ஆற்றுவதே-ஜீவகாருண்யம்.' இவ்வாறு சமயத்துறையில் மூழ்கி நின்ற அறிஞர் பலருடைய தமிழ் இலக்கியம்-சிறப்பாக உரை நடை இலக்கியம்-இந்த நூற்ருண்டின் விடியலிலே தோன்றி வளர்ந்ததென்பது கண்கூடு. இப்படியே பலப்பல மேற் கோள்கள் எடுத்துக் காட்டிக்கொண்டே போகலாமேனும் விரிவஞ்சி இவ்வளவோடு நிற்கலாம். எனினும் இப்படிச் சமய இலக்கியங்கள் உரை நடையில் ஏன் தோன்றின? அக்காலத்தெழுந்த கிறித்தவ சமய நெறிக்குமாருக, நாட்டில் நெடுங்காலமாக வாழ்ந்த சைவ வைணவ நெறிகளைப் பாது காக்க கினைத்தமையினலே இவ்வாருன இலக்கியங்கள் தோன்றின என்பர் அறிஞர், நாட்டில் வேற்றுச் சமயம் வளர்வதைக் கண்ட அறிஞர் தம் முயற்சியால் இத்துணை இலக்கியங்கள் தோற்றிய அதே காலத்தில் காட்டு இலக் கியங்களிலும் உரை நடையிலும் வேற்று மொழி விரவி கிலே கெடுமோ என்ற நிலையில் அந்த விரவு நிலையைத் தடுக்கவும் சிலர் முயன்றனர். அவருள் தலையானவர் ஆசிரியர் மறைமலை அடிகளாவர். இந்த நூற்ருண்டின் தொடக்கத்தில் நாம் மேற்கண்ட பல வடமொழிச் சொற். கள் சமயத்துறையிலும், பத்திரிகைத் துறையிலும், பிற துறைகளிலும் அதிகமாக வழங்கத் தொடங்கின அவற்றின் கலப்பால் தமிழில் உள்ள பல சொற்களும் 1. திருவருட்பா, ஆரும் பகுதி, பக். 24.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/223&oldid=874527" இலிருந்து மீள்விக்கப்பட்டது