பக்கம்:தமிழ் உரை நடை.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.220 தமிழ் உரை நடை எழுத்துக் கூட்டிப் படிக்கப் பழகுபவர்கள்கூட இத்தகைய காளிதழ்களைப் படித்துத் தம் அறிவை வளர்த்துக்கொள் கின்ருர்கள். எனவே, நாளிதழின் உரை நடை உயர்ந்த இலக்கிய நடையல்லாவிடினும், நாட்டில் கல்வியைப் பரப்ப அந்த நடையே பெரிதும் உதவுகிறது என்னலாம். இந்த இதழ்களைத் தவிர்த்து, சிறுகதை, நாடகம் போன்ற கலை வளர்க்கும் இதழ்களும் காட்டில் அதிகம் இன்றைய கலைகளில் பெரிதாகப் போற்றப்பெறும் சினிமாக் கலைக்கெனத் தனி இதழ்களும் உள்ளன. அவைகளெல் லாம் நாடகம், கதை முதலியவற்றை நாட்டில் வளரச் செய் கின்றன. இந்த நூற்ருண்டின் தொடக்கம் வரையிலே சிறுகதையோ, பெருங்கதையோ நாட்டில் இலக்கியங் களாகப் போற்றி வளர்க்கப்படவில்லை என்பதை வரலாறு காட்டும். ஆனால், இந்த நூற்ருண்டின் தொடக்கத்தில் ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி ஐயங்கார் போன்ருர் பெருகவீனங்களாகிய பெருங்கதைகளை உரை நடையில் எழுதி வெளியிட்டார்கள். அவைகள் மிக அதிக மான அளவில் நாடெங்கும் பரவலாயின. ஆயினும், அக் காலத்தில் சிறு கதை இலக்கியம் அதிகமாகப் பரவவில்லே என்னலாம். இந்நூற்ருண்டின் இடைக்காலத்தில்-பல கலை இதழ்களும் பொழுது போக்கு இதழ்களும் தோன்றிய காலத்தில்-சிறு கதைகள் பல்கிப் பெருகலாயின. இச்சிறு கதை இதழ்களுள் சில ஐம்பதாயிரத்துக்கும் மேலான எண்ணிக்கையில் வெளியாகின்றன. உரை நடை வளர்ச்சி யில் இந்த இதழ்களுக்குப் பெரும் பங்கு உண்டு என்ன « Gl)fTi 0. நாடகமும் இக்காலத்தில் ஓரளவு வளர்ந்து வந்துள் :ளது. மிக அதிகமான அளவில் நாடகங்கள் இலவேனும் சென்ற நூற்ருண்டுகளேவிட, இந்த நூற்ருண்டில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/229&oldid=874539" இலிருந்து மீள்விக்கப்பட்டது