பக்கம்:தமிழ் உரை நடை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 தமிழ் உரைநடை

யுள், என்கின்ருர். பேராசிரியரும், "தொன்மை என்பது உரை விராய்ப் பழைமைவாகிய கதை பொருளாகச் சொல்லப்படுவது. பெருந்தேவனராற் பா ட ப் பட் ட பாரதமும் தகடுர் யாத்திரையும் போல்வன” என்கின்ருர். நச்சினர்க்கினியரோ, சிலப்பதிகாரமும் இதன்பாற்படு மெனக் கூறுகின்ருர். *

இவற்றையெல்லாம் ஒத் து நோ க் கி ஆராயின், செய்யப்படுகின்ற உரைநடை பாட்டிற்கு முந்தியது எனக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. அத்துடன் உரைநடை என்பது முன்னர் நடந்த நிகழ்ச்சிகளைக் கற்ருர் மட்டு மன்றிக் க ல் லா ரு ம் நன்கு புரிந்துகொள்ளக் கூடிய வகையில் விளங்கிய நடையில் பேசியோ எழுதியோ காட்டும் வகையது என்பதும் நன்கு புலகிைன்றது. எனவே, கற்பனையோடு கலந்த-ஒரு சிலர் மட்டும் அறிந்து பயன் கொள்ளக் கூடிய-பாட்டு நடையைக் காட்டிலும், உரை நடை முந்திய தாகி, எல்லா மக்களும் எளிதில் அறிந்து கொள்ளக் கூடியதாய், பண்டைக்காலத்தில் பெரும் பாலும் பழங்கதை பற்றியே வருவதாய் அமைந்த ஒன்ரு கும். இன்று அவ்வுரைகடையே பிரிந்து பல்வேறு துறை களில் புகுந்து பணியாற்றுகின்றது. f - உண்மைதான். ஆனால், அன்று தோன்றிய உரை நடை எங்கே? பாட்டு எப்படிப் பல் கி ப் பெருகிற்று? அறிவு வளர வளரப் பாட்டும் பெருகும் என்பதை மேலே கண்டோம். ஒரு கால் தமிழ் நாட்டில் அனைவரும் நன்கு கல்வி கற்றிருந்தனர். அவர்கள் ஒருவரோடொருவர் பேசுவதெல்லாம் பாட்டிலேயே என்பது நன்கு தெரி கின்றது. உரைநடையைக் காட்டிலும் பா ட் ைட ப் புரிந்துகொள்வது சற்றுக் கடினந்தான் என்ருலும், அதைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு நாட்டில் கல்வி .சிறந்திருந்தது ஒரு காலத்தில். அக்காலத்தையே காம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/23&oldid=874541" இலிருந்து மீள்விக்கப்பட்டது