பக்கம்:தமிழ் உரை நடை.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேற்றும் இன்றும் 22? நாடக நூல்கள் தமிழில் அதிகமாக வளர்ச்சியுற்றன வென்றே அறிகிருேம். அந்தத் துறையில் பெரிதும் கருத். திருத்தி ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடக நூல்களே இயற்றிப் புகழ் பெற்றவர் பம்மல் சம்பந்த முதலியார் என்பவரேயாவர். அவர் நாடகங்களே எழுதியது மட்டுமன்றித்தாமே அந்த நாடகங்களை முன்னின்று கடிக்கச் செய்தும் நடித்தும் நாட கத்தை வளர்த்தார் என்னலாம். அவருடைய நாடகங்களில் நல்ல இலக்கிய உரை நடையைக் காணமுடியாது. பல நாட கங்களின் பாத்திரங்கள் கலப்பு மொழியையும் கொச்சை மொழியையுமே உபயோகிப்பார்கள். நாட்டில் சாதாரண மக்களின் மனதைக் கவர வேண்டுமாயின், அத்தகைய கொச்சை மொழியிலேதான் அது இயலும் என அவர் நினைத்திருப்பார். இன்றும் வாழ்கின்ற அறிஞராய அவர், நாடகம் எழுதத் தொடங்கிய அந்த நாளில் தமிழ் நாட்டில் கொச்சை மொழியே சாதாரண மக்கள் மொழியாய். இருந்ததை அறிந்து, அதன்படியே தம் நாடகப் பாத்திரங் களின் பேச்சுக்களையும் அமைத்துவிட்டார். எனினும், சிறந்த தம் உரை நடைப் பகுதிகள் விளக்கமாகவும் தெளி: வாகவும் செல்கின்றன என்னலாம். இவரையன்றிப் பரிதிமாற் கலைஞரெனத் தம் ப்ெய: ரைத் தனித் தமிழில் மாற்றி அமைத்துக்கொண்ட மதுரை. விளாங்குடி சூரியநாராயண சாத்திரியார் அவர்கள் சில நாடகங்களை இயற்றியுள்ளார். 'நாடக இயல்' என்ற நாடகம் பற்றிய ஓர் இலக்கண நூலும் அவர் வழி நாடு. பெற்றது. அவரும் சிறந்த நாடகப் பாத்திரங்களின் உரை கடையை ஒரளவு இலக்கிய அமைப்பில் அமைத்தக போதிலும், சாதாரண பாத்திரங்களின் பேச்சையெல்லாம் கொச்சைத் தமிழிலேதான் அமைத்தார் என்னலாம். இவ் வாறு கொச்சைத் தமிழின் உதவி அந்த வேளைக்கு மக்களால் பெரிதும் விரும்பப்பட்டுப் பெருமதிப்பை ஆசிரியர்களுக்குத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/230&oldid=874543" இலிருந்து மீள்விக்கப்பட்டது