பக்கம்:தமிழ் உரை நடை.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேற்றும் இன்றும் 225 தகுதி. துரைத்தனக் கலாசாலையில் சுதேச பாஷை களின் விசாரணைத்தலைவராக இருந்த வால்டர் ஜாயிஸ் என்பவர். சில தமிழ்ப் புலவர்களுடைய உதவியால் மூன்று வாசக பாடங்களை உருப்படுத்தினர். இரண் டாவது மூன்ருவது வாசக பாடங்களில் பல பாடங்கள், இங்கிலீஷிலிருந்து சிறுவர்களுக்கேற்ற வாருக மொழி பெயர்க்கப்பட்டவை. இவை பல் லாண்டு பல்லாண்டாக வாழாவிடினும், பல வருஷ காலம், சிறுவர் சிறுமியர் மாத்திரமேயன்றிப் பல தமிழ்ப் புலவரும், தமிழ் வசனம் வாசிக்கவும் எழுத வும் அறியத்தக்க சாதனங்களாகி இருத்தன.' "சில வருஷங்களாகச் சில அபிநவ கதைகளும் சில வசன நாடங்களும் சில வியாசங்களும் வெறுங் கதைகளும் சிலர் எழுதி வருகின்றனர். சில நாடகங் களும் வியாசங்களும் நேரான மொழிபெயர்ப்பு களாகவும் எழுதப் பட்டு வருகின்றன. இங்கிலீஷின் சாரமாகவும் சில எழுதப்படுகின்றன. இவற்றில் கொள்ளத்தக்கனவும் தள்ளக்கனவும் இன்னும் தீர்க்கமாக ஏற்படவில்லை. பழையன கழிதலாய்ப் புதியன புகுதலாய்க் காலதேச வியல்பு மாறி வரினும், சத்துள்ளனவாய் எஞ்சி நிற்கும் காலங் கண்ட பழம் பனுவல்களே புலவர் போற்றுவன. புலவர் போற்றுவன பழம் பனுவல்களேயாயினும் புலவர் திலகரானவர்கள் புதுக்கால் வெட்டாமல் இரார்; புதுக்கால் பயன் தருவதாயின், காலக்கிர மத்தில் போற்றப்பட்டு வரும். இல்லையாயின் தானே தூர்ந்து போய்விடும்.' 'நூணடை செவ்வி பெறுதலான இந்தச் சித்தி, தொட்டுக் காட்டியும் சுட்டிக் காட்டியும் விளக்குவ தான ஒர் வித்தை யன்று. தொட்டுக் காட்டாத 1. தமிழ் வியாசங்கள், பக். 113 2. டிெ பக். 117 15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/234&oldid=874552" இலிருந்து மீள்விக்கப்பட்டது