பக்கம்:தமிழ் உரை நடை.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 தமிழ் உரை கடை உருவாக்கின என்பது மிகையாகாது. யாருக்கும் அஞ்சாது, எந்த அடிமைப் பணிக்கும் தம்மை உரிமையாக்காது தனித்து இருந்து, குடும்ப வாழ்வு குலைந்த போதும் தம் அண்ணனர் ஆதரவில் இருந்து, சாது அச்சகம் அமைத்து. சளேயாது உரை நடையில் பலப் பல நூல்கள் எழுதிய இராயப் பேட்டை முனிவர் திரு. வி. கல்யாணசுந்தரனரைத் தமிழ் உலகம் மட்டுமன்றி, அரசியல் உலகமும், தொழி லாளர் உலகமும், பெண்டிர் உலகமும் என்றென்றும் போற்றக் கடமைப்பட்டன. அவர் தமிழ் கடைசிறப்பாக உரை கடை-எல்லாராலும் போற்றப் பெறுவது. இன்று வாழ்கின்றவருள் பல்லோர் அவர் உரை நடையைப் பின் பற்றுபவர் என்னலாம். அவர் நடையில் ஒரு புது அழகுபொலிவு, விளங்கக் காணலாம். -- சிறு சிறு வாக்கியங்களாக-பேச்சு நடையை ஒத்த வகையில்-தமிழ் உரை நடையைத் திரு. வி. க. அவர்கள் எழுதுவார்கள். அவர் எடுத்து விளக்காத பொருள் இல்லே என்னலாம்-கடவுள் நெறி, காதல் வாழ்வு, பெண்மை கலம், தொழிலாளர் வாழ்வு, மாணவர் வருங்காலம், அரசியல் அலைகள், இயற்கை எழில் இத்தனையும் அவர்தம் எழுத்தோவியங்களில் காணலாம். அவருடைய உரை கடையில் துடிதுடிப்பு மிளிர்வதைக் காணலாம். சிறு சிறு வாக்கியங்களாயினும், அவற்ருல் தெளிந்த கருத்துக்களே அவர் விளக்க முன்னிற்பதைப் பயில்வார் நன்கு அறிவர். 'போர் இரு வகை. ஒன்று அறப்போர்; மற். ருென்று மறப்போர், அறப்போர் தன்னலமற்றது: மற்றையது தன்னலமுடையது. தன்னலமற்ற அகிம்சா தர்மப் போர் கொலையாகாது. மற்றப் போர் கொலையின் பாற்படும். விளக்கம் பகவத் கீதையிலும் திருக்குறளிலும் பார்க்க.' 1. இந்தியாவும் விடுதலையும்; பக். 16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/237&oldid=874558" இலிருந்து மீள்விக்கப்பட்டது