பக்கம்:தமிழ் உரை நடை.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேற்றும் இன்றும் 229. என்ற அவர் தம் இனிய எளிய நடை உயர்ந்த பொருளே’ விளக்குவதைக் காண்லாம். உயர்ந்த பொருள்களையும். அவர்தம் உரைநடை எளிமையில் நன்கு விளக்கும் திறம். வாய்ந்த தென்பதைக் கீழ் வரும் பகுதியால் உணரலாம். 'த த் து வ ம் என்பது மாயா காரியம். மாயையே இயற்கை. இயற்கை இறைவனது உடல் -போர்வை. இறைவனுக்கு இருவித நிலையுண்டு: ஒன்று இயற்கையை உடலாகக் கொண்டது; மற் ருென்று இயற்கையைக் கடந்து நிற்பது .இசை நாதத்தின் வாயிலாக எல்லாத் தத்துவங்களிலும் கலந்து நிற்பது. அவ்வத் தத்துவத்தில் நின்று இசையெழும்போது, அஃது அவ்வத் தத்துவ சொரூபமாகவே பயன் விளைக்கும். அதன் சுய சொரூபம் நாதத்தாலேயே விளங்கும். நாதம் வரை சென்ற மக்களே இசையின் நுட்பம் உணர்ந்த வர்களாவார்கள்.' இவ்வாறு அவர் உரை நடைக்குப் பல எடுத்துக்காட்ட லாம். இந்த முறையிலேதான் இன்று உரை நடை வளர்க்க துள்ளதை அனைவரும் அறிவோம். மறைமலை அடிகளைத். திரு. வி. க சிறக்கப் போற்றினலும், அவர் நடையில் தூய தனித் தமிழ் மணம் வீசவில்லை என்பதையும் அறிய. வேண்டும். பாக்களுக்குச் சீரும், தொடையும், அடியும் எப்படிச் சிறந்து நிற்கின்றனவோ, அப்படியே உரை நடைக்குச் சொல்லாட்சியும், பத்திப் (Para) பிரிவும் மிக முக்கிய மானவை. நல்ல சொற்களைக்கொண்ட சிறு சிறு வாக். கியங்களாக அமைத்து, அவற்ருல் பொருள் அமைதி கருதிச் சிறு சிறு பத்திகளை அமைக்கும் திறன் திரு. வி. க. அவர் களிடம் மிக்கிருக்கக் காணலாம். சென்ற இரண்டொரு. 1. இந்தியாவும் விடுதலையும் பக். 66, 67

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/238&oldid=874560" இலிருந்து மீள்விக்கப்பட்டது