பக்கம்:தமிழ் உரை நடை.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 தமிழ் உரை நடை நூற்ருண்டுகளில் உரை நடை வளர்ச்சி பெற்ருலுங்கூட அங்காளிளெல்லாம் பத்தி பிரிக்கும் வகை அவ்வளவு அதிக மாகப் போற்றப் பெறவில்லை. மற்றும், வாக்கியங்களெல் லாம் நீண்டனவாகச்-சில பக்கங்கள் செல்லும் அளவிலே கூட-அமைந்துள்ளன. எல்லாராலும் அவ்வாக்கியங்களைப் படித்து அறிதல் கூடுமோ? எனவே, சின்னஞ்சிறு வாக்கியங் களைக் கொண்டே ஆசிரியர் தம் உள்ளக் கருத்தை வெளி -யில் காட்ட இயலும். திரு. வி. க. அத்துறையில் தாமாகவே சென்று எளிமையாக வெற்றி பெற்ருர். இன்று அவர் வழிச் சென்று பல பத்திரிகாசிரியர்களும், பேராசிரியர்களும் நல்ல பயன்களைப் பெறுகின்ருர்கள் என்பது கண்கூடு. இன்று-இருபதாம் நூற்ருண்டின் இடையிலேதான் தமிழ் உரை நடை என்பது என்ன என்று ஆராயக்கூடிய அறிவு மனப்பான்மையும் மக்கள் உள்ளத்தில் இடம் பெற் மறுள்ளது. மேலே நாட்டிலே பல ஆண்டுகளாக எழுதி வைக்கப்பெற்ற உரை நடை இலக்கணங்களே ஆய்ந்து, அவ்விலக்கண நெறி பிறழா வகையில் தமிழ் உரை நடை அமைந்துள்ளதா எனப் பகுத்துப் பார்க்கவும் தொடங்கு கின்றனர். எனவே. இந்த நூற்ருண்டின் இடைக்கால மாகிய இற்றை நாளில், உரை நடை வளர்ச்சியும் உரை நடை பற்றிய ஆராய்ச்சி வளர்ச்சியும் மிக அதிகமாக வளர்வதைக் காண இயல்கின்றது. 'பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெய்ர்த்தல் வேண்டும், என்ற கனவினைக் கண்டார் பாரதியார். அக்கனவு இந்த நாளி ல் நிறைவேறி வருவதைக் காண்கிருேம். இத்துறையிலும் தமிழ் உரை கடை வளர்ச்சியுறுகின்றது. அறிவியற்றுறை நூல்கள் .பல நல்ல தமிழில் மொழிபெயர்க்கப் பெறுகின்றன. ஆங்கில நாட்டுக் கதைகளும் பிற வெளி நாட்டுக் கதை வகளும் தமிழில் மொழிபெயர்க்கப் பெறுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/239&oldid=874562" இலிருந்து மீள்விக்கப்பட்டது