பக்கம்:தமிழ் உரை நடை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரை நடையின் தோற்றமும் வளர்ச்சியும் 15 சங்க காலம் என்கிருேம். சிறந்த புலவர் மட்டுமின்றி, சாதாரண மக்களுங்கூடத் தாம் சொல்ல வேண்டிய கருத்தைப் பாட்டாலேயே சொல்வதைக் காண்கின்ருேம். மன்னர் செய்யும் தவறுகளை எடுத்துரைக்க நினைத்த சாதாரணக் கிராமங்களில் உள்ள பெண்டிருங்கூடத் தம் கருத்தைப் பாட்டாகவே கூறியுள்ளனர். காதல் இன்ப நினைவுகளையெல்லாம் பாட்டாலேயே விளக்குகின்றனர். கரிகாலன் முன் வெண்ணி என்ற ஊரில் வாழ்ந்த குயத் தியார் பேசியது பாட்டுத்தானே? இன்னும் நச்செள்ளையார் மாசாத்தியார் போன்ற மகளிர் எங்கோ சிற்றுார்களில் வாழ்ந்து நன்கு கற்றுத் துறைபோகிய காரணத்தால் தாம் தாம் கூறவந்த கருத்துக்களைப் பாட்டாகவே பாடிவிட்டனர். சங்ககாலப் புலவர் வரிசையைப் புரட்டிப் பார்ப்போ மானல், கபிலர், ஒளவையார், பரணர் போன்ற பெரும் புலவர்களே யன்றிச் சாதாரண மக்களுள் பலரும் எளிய கருத்துக்களையும் பாட்டாகவே பாடியதைக் காண இயலும். நாட்டில் கல்வி நலம் சிறந்தோங்கி நின்ற காரணமே மக்கள் இவ்வாறு உரைநடையை விட்டு, பாட்டுக்குப் போக நேர்ந்த ஒரு காரணமாகும். என்ருலும் இதைக்கொண்டே பாட்டுக்கு முன் வாழ்ந்த உரைநடையை இல்லை என்று சொல்ல முடியாது. சங்ககாலத்துக்கு முன் வாழ்ந்த மக்கள் தாங்கள் பேசிய அத்தனையையும் எழுதி வைக்க வேண்டும் என்று கினைத்திருக்கமாட்டார்கள். அது தேவையற்றதுங்கூட. அவர்தம் உரைநடைகள் எழுதி வைக்கப்பெற்றிருப் பின், அவைகளே பல பேரிலக்கியங்களாய் விளங்கி இருக்கலாம். என்ருலும், சாதாரணப் பேச்சுக்களே யார் எழுதி வைப்பார்கள்? இன்றும் அவ்வாறு செய்பவரைக் காண்கிலோம். சங்க காலத்தில் கற்ற அறிவு காரண மாக, இயற்கைக்கு மாறுபட்ட கிலேயிலே பேச்செல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/24&oldid=874564" இலிருந்து மீள்விக்கப்பட்டது