பக்கம்:தமிழ் உரை நடை.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேற்றும் இன்றும் 23?” இந்திய நாட்டில் உள்ள வங்காளி, மராத்தி, இந்தி, மலையாளம் போன்ற பிற மொழிகளிலிருந்து சிறு கதை. களும் பெருகதைகளும் மொழிபெயர்க்கப் பெறுகின்றன. பல்வேறு பிற காட்டார் கருத்துக்கள் தமிழில் உரை கடையாக்கப்பெற்று வெளிவருகின்றன. விண்வழி இயங்கும். விஞ்ஞானக் கருத்துக்கள் வரை இன்று அனைத்தும் மொழிபெயர்க்கப் பெறுகின்றன. எனவே, இன்றைய உரைநடை மொழிபெயர்ப்பால் நன்கு வளர்கிறது . GT6ÖTGÖTGA)fTi 0. உரிமை பெற்ற இந்திய அரசாங்கமும், அதன் உறுப்பு ஆட்சியாக அமையும் சென்னே அரசாங்கமும் தமிழும் பிற நாட்டு மொழிகளும் வளரப் பேருதவி செய் கின்றன. வெளி வரும் நல்ல உரைநடை நூல்களுக்குப் பரிசுகள் தருகின்றன. ஒன்றும் அறியாச் சாதாரண மக்களும், குழந்தைகளும் உணர்ந்துகொள்ளுகின்ற வகையில் சிறு சிறு எளிய நூல்களே எழுத வைத்துச் சிறந்தவற்றிற்குப் பரிசுகள் வழங்குகின்றன. அரசாங்கத் தார் மட்டுமன்றிச் சில தனித்த சபைகளும் கழகங்களுங் கூடக் கட்டுரைப் போட்டி முதலியன நடத்திச் சிறந்த எழுத்தாளர்களுக்கு நல்ல வகையில் பரிசளித்துத் தமிழ் உரைநடையை வளர்த்து வருகின்றன. எனவே, இன்றைய உரைநடை வளர்ச்சியில் அனைவரும் பங்கு பெறுகின்றனர். இவ்வாறு உரைநடை வளரும் கிலேயில் தமிழ். அறிஞர் தம் பங்கினை நல்ல முறையில் செய்து உதவு கின்றனர். இந்த நாளில் மக்கள் படிக்கும் பழக்கத்தை அதிகமாக வளர்த்துக்கொண்டார்கள்; காட்டில் போதிய நல்ல நூல்கள் இல்லையே என்ற குறையை நீக்கும் வகை யிலே அறிஞர் பலர் பலப்பல நூல்களைப் பலப்பல வழி' களில் எழுதி வந்துள்ளார்கள். திருந்திய வகையில் நல்ல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/240&oldid=874566" இலிருந்து மீள்விக்கப்பட்டது