பக்கம்:தமிழ் உரை நடை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 தமிழ் உரை நடை. பாட்டாக வந்தமையின், அவற்றை எழுதி வைக்க வேண்டிய எண்ணம் அவர்களுக்குத் தோன்றியிருக்கக் கூடும். எனவே, அவர்கள் எழுதி வைத்தார்கள். வீட்டில் வைக்கும் புளிக்குழம்பின் சுவை முதல், நாட்டில் நடை பெறும் பெரும் போர் வரை-தனிப்பட்ட மனிதன் வாழ்வு முதல் சமுதாய வாழ்வு வரை-எல்லாவற்றையும் எழுதி வைத்து விட்டார்கள். எனவே, அவை அப்படியே இலக்கியங்களாகிவிட்டன. தாங்கள் பெற்ற இன்பத்தை இயற்கை வகையில் உரைநடையில் பேசியிருப்பார்களா யின் இத்துணை இலக்கியம் பெருகி இரா. தாங்கள் கற்ற அறிவின் திறத்தைப் பாட்டாக்கிப் பேசிய காரணமே இலக்கியப் பெருக்கத்துக்குக் காரணமாகியது. இவ்வாறு: கற்றவர் மிக்கு இருந்த காலத்தில் பாட்டு வளர அதற்கு, முன் இருந்த உரைநடை மெள்ள மெள்ள மறையலா யிற்று. அதை யாரும் எழுதி வைக்க கினேயாமையும். பின் வந்த அறிவறிந்த மக்கள் கூட்டத்தின் கட்டுப்பாடும். ஒருசேரத் தமிழில் முதலில் தோன்றிய உரைநடையை இல்லையாகச் செய்துவிட்டன என்னலாம். இன்றைக்கும் நாளிதழ்களில் சாதாரணமான செயல்களைப் படிப்பதை விட்டு, இயற்கைக்கு மாறுபட்ட சில அற்புதத் திடீர் நிகழ்ச்சிகளைத்தானே ஆழ்ந்து காண்கிருேம் பரபரப்பு அதைப் படிப்பதில்தானே உண்டாகிறது? இயற்கையாக வாழும் ஒருவனே யாரும் மதிப்பதில்லை. இயற்கைக்கு மாறு: பட்டு உயர்ந்தோ தாழ்ந்தோ வாழ்வானுயின், அவனே உலகு. நோக்குகிறது. எனவே, இங்கிலேயில் இயல்பான உரை நடையை விட்டு, கற்பனைக் கவிதைகளையே அன்று எழுதி வைத்தனர். நாள்தோறும் இயல்பாக நிகழும் நிகழ்ச்சி களேயா பத்திரிகைகள் எழுதிவைக்கின்றன? நம் நாட்குறிப் பிலும் நாள்தோறும் இயல்பாக நடப்பன பற்றியா காம் எழுதுகிருேம்? அது போன்றே நாள்தோறும் சாதாரணப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/25&oldid=874589" இலிருந்து மீள்விக்கப்பட்டது