பக்கம்:தமிழ் உரை நடை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 தமிழ் உரை நடை சாதாரண உரைநடையை எழுதுதல் தம் மேதைத் தன் மைக்கு இழுக்கு என அவர்கள் நினைத்திருக்கலாம். ஆயினும், அதே வேளையில் அதற்காக முன் ஒருகால் வளர்ந்து வாழ்ந்த உரைநடையை விட்டுவிட அவாகள் உள்ளம் இடம் தந்திராது. எனவே, பாட்டு நடையைக் காட்டிலும் கடினமான வகையிலே உரைநடையை ஆக்க வேண்டும் என்று திட்டமிட்டிருப்பார்கள் அக்கற்றறிந்தவர் கள். எனவேதான் சங்க காலத்தை ஒட்டி எழுந்த உரை கடைகள், செய்யுள் நடையைக் காட்டிலும் சற்றுக் கடின LDT6T6TD6)1(LITEE, உயர்ந்தனவாகவே அமைந்துவிட்டன போலும்! இவ்வாறு மறைந்த உரைநடை தமிழில் புது உணர்ச்சி யோடும், புதுடையோடும் தோன்றி வளர்ந்து வரலாயிற்று. இன்றைய ஆராய்ச்சியின்படி சிலப்பதிகாரந்தான் இந்தப் புதிய உரைநடைக்கு வித்திட்டது என்பதைச் சிலப்பதி காரத்துக்கே உரை யிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்' என்ற பெயர் உண்டு என்பதல்ை அனைவரும் அறிவர். இளங்கோவடிகள் மறைந்த உரைநடையை எடுத்துப் போறறி மககள் முன் புது மெருகோடு கொண்டு வந்து நிறுத்தினர். ஆம் அவாதம் முயற்சி அப்போதே சிறந்த பயனைத் தரவில்லை என்ருலும், சில நூற்ருண்டுகள் கழித்து இந்த இருபதாம் நூற்ருண்டில் உரைநடை இலக்கியங் களே உலக இலக்கியங்களாகும் வகையில் வளர்ந்து வாழ் வதைக் காண, நாம் அவருக்கு நன்றி செலுத்தக் கடமைப பட்டு இருக்கிருேம். இளங்கோவடிகள் புது மெருகிட்டுத் தோற்றி வைத்த அந்த உரைநடை இலக்கியம், நூற்ருண்டு தோறும் பல்வேறு சூழல்களுக்கு உட்பட்டு, சிறுகச் சிறுக வளர்ந்து, இன்று நம்முன் ஒரு பெருமலையாகக் காட்சி தருகின்றது. அவர் தொடங்கிய பணியை இதுவரையிலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/27&oldid=874593" இலிருந்து மீள்விக்கப்பட்டது