பக்கம்:தமிழ் உரை நடை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரைநலடயின் தோற்றமும் வளர்ச்சியும் 9 சிறக்கவைத்த அறிஞர் பலர்; இன்றும் சிறக்க வைக்கின்ற அறிஞர் பலப் பலர். தமிழில் பாட்டும் உரைநடையும் மிகவும் பரவி வரு கின்ற இக்காலத்தில் அவற்றின் தோற்ற வளர்ச்சிகள்ே ஆராய வேண்டிய இன்றியமையாத நிலை ஏற்பட்டுவிட்டது. மேலே நாட்டு அறிஞர்கள் பல காலமாகவே பாட்டையும் உரையையும் பகுத்துப் பார்த்து ஆராய்ந்து ஒவ்வொன் றைப் பற்றியும் அரிய பல நூல்களை எழுதி வெளியிட்டு வந்துள்ளார்கள். மேலும், ஆங்கில மொழியில் உரைநடை நூல்கள் பல நூற்ருண்டுகளாகவே தோன்றி வளர்ந்து வந்துள்ளன. இலத்தீன், கிரீக்குப் போன்ற பழம்பெரு மொழிகளில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உரைநடை இலக்கியங்கள் தோன்றி வளர்ந்துள்ளன என அறிகின்ருேம். எனவே, அந்த காட்டு மொழிகளிலே உரை நடை பற்றிய ஆய்வு நூல்களும் மிகு பழங்காலத்திலிருந்தே வளர்ந்து வந்து உள்ளன. தமிழிலே அந்த நிலையைக் காண இயலவில்லை. தொல்காப்பியர் காலத்திலே உரைகட இருந்த தாக இரண்டொரு சூத்திரங்கள் காட்டுகின்றன. ஆயினும் அக்காலத்து உரைநடைகளே நம்மால் காண இயலாது. உரையாசிரியர்கள் அக்கால உரைநடைக்குத் தகடூர் யாத்திரை' போன்றவற்றை உதாரணமாகக் காட்டு கின்ருர்கள். ஆயினும், அவ்வாறு காட்டப்பட்ட உரை நூல்களும் இன்று நமக்குக் கிடைக்கவில்லை. எனவே, பழங் காலத்தில் தமிழ்நாட்டில் உரைநடை வழக்கில் இருந்தாலும் அது எவ்வகையில் இலங்கிற்று என்பதை அறிந்து கெசள்ளும் வாய்ப்பு நமக்கு இல்லையாகிவிட்டது. 1. பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே (தொல் - செய், 79.) பாட்டிடை வைத்த குறிப்பி னுைம் (தொல் - செய். 173.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/28&oldid=874595" இலிருந்து மீள்விக்கப்பட்டது