பக்கம்:தமிழ் உரை நடை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 தமிழ் உரை நடை சங்ககாலத்திலும் நாம் உரைநடையைப் பெற்ருேமில்லை. சங்க காலத்தை ஒட்டி, சற்றுப் பின் எழுந்த காப்பியங் களுள் தலையாய சிலப்பதிகாரத்தைத்தான் உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுள்' என்று ஆசிரியர்கள் காட்டு கின்ருர்கள். என்ருலும், அதிலும் தொடர்ந்து உரைநடை யைக் காணுதல் அரிது என்னலாம். பின் நெடுங்காலம் கழித்து எட்டாம் நூற்ருண்டின் தொடக்கத்திலேதான் நாம் தெளிந்த உரைநடையைக் காண்சின்ருேம். இறையனர் களவியல் உரையே அந்த உரைநடை நூலாகும். அதில் இறையனர் சூத்திரங்களுக்கு விளக்கமாக உரை எழுதப் பெற்றுள்ளது. அவ்வுரையில் மேற்கோட் செய்யுள்கள் தவிர்த்த மற்றவை உரைநடையாகவே அமைகின்றன. எனவே, அந்தக் காலத்திலேதான் தமிழ்மொழியின் உரை நடை இத்தகையது என்பதை அறியமுடிகின்றது. எட்டாம் நூற்ருண்டுக்குப் பிறகு இறையனர் களவியல் உரையைப் போன்ற பல தோன்றியிருக்கக் கூடும். அவற்றைப் பற்றி நம்மால் ஆய்ந்து பார்க்க இயலவில்லை. என்ருலும், அதற்கடுத்த இரண்டொரு நூற்ருண்டுகள் கழித்து, தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்களுக்கும் பத்துப்பாட்டுப் போன்ற இலக்கியங்களுக்கும் உரை எழுத அறிஞர் பலர் முன் வந்தனர். அவர்தம் உரைவழித் தமிழில் உரைநடை நன்கு வளர்ந்தது என்னலாம். அவரவர் காலத்து நாட்டு கிலே, பிறகாட்டாரது கலப்பு, அவர்தம் மொழி ஆதிக்கம் முதலியவற்றின் அடிப்படையிலே உரைகள் செல்கின்றன என்னலாம். உரையாசிரியர்களுள் இளம் பூரணர், பேரா சிரியர், நச்சினர்க் கினியர், பரிமே லழகர், சேன வரையர் அடியார்க்கு நல்லார் போன்ற ஒரு சிலர் மிக முக்கியமான நிலையில் நல்ல நூல்களுக்கு உரை கண்டுள்ளார்கள். சுமார் பன்னிரண்டாம் நூற்ருண்டுக்கும் பதினைந்து பதினரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/29&oldid=874597" இலிருந்து மீள்விக்கப்பட்டது